இலங்கை அணி முதலிடத்தை பெற்று குழு 01 இற்குள் சென்றது.

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும், நமிபியா அணிகளுக்கிடையில் நடைபெற்ற உலக கிண்ண தொடரின் முதல் சுற்றின் இரண்டாம் போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணி பெற்றதன் மூலம் இலங்கை கிரிக்கெட் அணி இரண்டாம் சுற்றுக்கு முதலிடத்தை பெற்று தெரிவாகியுள்ளது. இலங்கை அணியோடு நெதர்லாந்து அணியும் இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகியுள்ளது.

குழு 01 இல் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் நேரடியாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை அணியினை தோற்கடித்த நமிபியா ஆனி ஐக்கிய அரபு அமீரக அணியிடம் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு அமீரக அணி முதலில் துடுப்பாடியது. 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 148 ஓட்டங்களை அவர்கள் பெற்றுகே கொண்டார்கள்.

இதில் முகமட் வசீம் 50 ஓட்டங்களையும், சுந்தங்கபோயில் ரிஸ்வான் 43 ஓட்டங்களையும், பசில் ஹமீட் 25 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்துவீச்சில் டேவிட் வைஸ், பேர்னாட் ஸ்கொல்ஸ், பென் ஷிகாகோங் ஆகியர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றிக் கொண்டனர்.

பதிலுக்கு துடுப்பாடிய நமிபியா அணி 20 ஓவர்களில் 08 விக்கெட்களை இழந்து ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. டேவிட் வைஸ் 55 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் பசில் ஹமீட், ஷகூர் கான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினர். கடந்த போட்டியில் ஹட்ரிக் சாதனை படைத்த கார்த்திக் மெய்யப்பன் ஒரு விக்கெட்டினை கைப்பற்றினார்.

66 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற நிலையிலிருந்த வேளையில் ஜோடி சேர்ந்த டேவிட் வைஸ், ருபேன் ரம்பில்மான் ஆகியோர் இறுதி வரை போராடி வெற்றிக்கு மிக அண்மையாக ஓட்ட எண்ணிக்கையினை கொண்டு வந்த போதும் இறுதி ஓவரில் வைஸ் ஆட்டமிழக நமிபியா அணி தோல்வியடைந்தது.

புள்ளி பட்டியல்

 அணிபோட்டிவெற்றிதோல்விகைவிடபுள்ளிஓ.நி.வே
1இலங்கை03020100040.667
2நெதர்லாந்து0302010004-0.162
3நமிபியா03010200020.600
4ஐக்கிய அரபு அமீரகம்0301020002-2.028
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version