ICC T 20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் பாகிஸ்தான், இந்தியா அணிகளுக்கிடையிலான போட்டியில் இந்தியா அணி 04 வெற்றி விக்கெட்களினால் வெற்றி பெற்றது.
ஆரமபம் முதலே விறு விறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இறுதி வரை வெற்றி பெறுவது யாரென அனுமானிப்பது கடினமாக காணப்பட்டது. விராத் கோலியின் அனுபவம் மற்றும் ஹார்டிக் பாண்ட்யாவின் அதிரடி இந்தப் போட்டியில் இந்தியா அணி வெற்றி பெறுவதற்கு முக்கியமான காரணமாக அமைந்து.
நாணய சுழற்சியில் இந்தியா அணி வெற்றி பெற்று களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி ஆரம்ப விக்கெட்களை அர்ஷ்தீப் சிங்கின் பந்துவீச்சில் இழந்து தடுமாறியது. ஷான் மஷூட் இறுதி வரை ஆட்டமிழக்காமல் பபாகிஸ்தான் அணியின் ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தினார். இப்திகார் அஹமட் அதிரடியாக அரைச்சதத்தை பூர்த்தி செய்தார். இவர்களது துடுப்பாட்டமே தடுமாறிய பாகிஸ்தான் அணிக்கு வலுவான ஓட்ட எண்ணிக்கயினை பெற்றுக் கொடுத்தது.
பதிலுக்கு துடுப்பாடிய இந்தியா அணி முதல் நான்கு விக்கெட்களையும் இழந்து தடுமாறிய நிலையில் ஜோடி சேர்ந்த விராத் கோலி, ஹார்டிக் பாண்ட்யா வழங்கிய இணைப்பாட்டம் இந்தியா அணியின் ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தியது. இருவரும் சத இணைப்பாட்டத்தை பூர்த்தி செய்தனர். விராத் கோலி, ஹார்டிக் பாண்ட்யா இருவரும் அரைச்சதங்களை பூர்த்தி செய்தனர். ஹரிஷ் ராப், நஸீம் ஷா ஆகியோர் ஆரம்ப விக்கெட்களை கைப்பற்றி இந்தியா அணியினை தடுமாற வைத்தனர்.
இறுதி ஓவரில் 16 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் முதல் பந்தில் பாண்டியா ஆட்டமிழந்தார். கார்த்திக் 1 ஓட்டத்தை பெற்றுக் கொடுக்க கோலி இரண்டு ஓட்டங்களை ஓடிவிட்டு அடுத்த முறையற்ற பந்தில் 6 ஓட்டத்தை அடித்தார். அடுத்த பந்து அகல பந்தாக அமைந்தது. அடுத்த பந்தில் கோலி போல்ட் செய்யப்பட அந்த பந்தில் 3 ஓட்டங்களை ஓடி பெற்றனர். அதன் பின்னர் கார்த்திக் ஒரு பந்தை வீணடித்து பின்னர் ஆட்டமிழந்தார். அஷ்வின் முதல் அகல பந்தை எதிர்கொண்டு, இறுதிப் பந்தில் நான்கு ஓட்டங்களை பெற்று கொடுக்க இந்தியா வசமானது வெற்றி.
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
லோகேஷ் ராஹுல் | BOWELD | நசீம் ஷா | 04 | 08 | 0 | 0 |
ரோஹித் ஷர்மா | பிடி – இப்திகர் அஹ்மத் | ஹரிஸ் ரௌப் | 04 | 07 | 0 | 0 |
விராட் கோலி | 82 | 53 | 6 | 4 | ||
சூரியகுமார் யாதவ் | பிடி – முஹமட் ரிஸ்வான் | ஹரிஸ் ரௌப் | 15 | 10 | 2 | 0 |
அக்ஷர் படேல் | RUN OUT | 02 | 03 | 0 | 0 | |
ஹார்டிக் பாண்ட்யா | பிடி – பாபர் அசாம் | மொஹமட் நவாஸ் | 40 | 37 | 1 | 2 |
தினேஷ் கார்த்திக் | Stump | மொஹமட் நவாஸ் | 01 | 03 | 0 | 0 |
ரவிச்சந்திரன் அஷ்வின் | 04 | 01 | 1 | 0 | ||
உதிரிகள் | 05 | |||||
ஓவர் 20 | விக்கெட் 06 | மொத்தம் | 163 |
, ரவிச்சந்திரன் அஷ்வின், மொஹமட் ஷமி, புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங்
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
ஷயின் ஷா அப்ரிடி | 04 | 00 | 34 | 00 |
நசீம் ஷா | 04 | 00 | 23 | 01 |
ஹரிஸ் ரௌப் | 04 | 00 | 36 | 02 |
ஷதாப் கான் | 04 | 00 | 21 | 00 |
மொஹமட் நவாஸ் | 04 | 00 | 42 | 02 |
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
முஹமட் ரிஸ்வான் | பிடி – புவனேஷ்வர் குமார் | அர்ஷ்தீப் சிங் | 04 | 12 | 1 | 0 |
பாபர் அசாம் | L.B.W | அர்ஷ்தீப் சிங் | 00 | 01 | 0 | 0 |
ஷான் மசூட் | 52 | 42 | 5 | 0 | ||
இப்திகர் அஹ்மத் | L.B.W | மொஹமட் ஷமி | 51 | 34 | 2 | 4 |
ஷதாப் கான் | பிடி – சூரியகுமார் யாதவ் | ஹார்டிக் பாண்ட்யா | 05 | 06 | 1 | 0 |
ஹைதர் அலி | பிடி – சூரியகுமார் யாதவ் | ஹார்டிக் பாண்ட்யா | 02 | 04 | 0 | 0 |
மொஹமட் நவாஸ் | பிடி – தினேஷ் கார்த்திக் | ஹார்டிக் பாண்ட்யா | 09 | 06 | 2 | 0 |
அசிப் அலி | பிடி – தினேஷ் கார்த்திக் | அர்ஷ்தீப் சிங் | 02 | 03 | 0 | 0 |
ஷயின் ஷா அப்ரிடி | பிடி – புவனேஷ்வர் குமார் | புவனேஷ்வர் குமார் | 16 | 08 | 1 | 1 |
ஹரிஸ் ரௌப் | 06 | 04 | 0 | 1 | ||
உதிரிகள் | 12 | |||||
ஓவர் 20 | விக்கெட் 8 | மொத்தம் | 159 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
புவனேஷ்வர் குமார் | 04 | 00 | 22 | 01 |
அர்ஷ்தீப் சிங் | 04 | 00 | 32 | 03 |
மொஹமட் ஷமி | 04 | 00 | 25 | 01 |
ஹார்டிக் பாண்ட்யா | 04 | 00 | 30 | 03 |
ரவிச்சந்திரன் அஷ்வின் | 03 | 00 | 23 | 00 |
அக்ஷர் படேல் | 01 | 00 | 21 | 00 |