ICC T20 உலக கிண்ண தொடரின் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான போட்டி இன்று அவுஸ்திரேலியா பேர்த்தில் இலங்கை நேரப்படி மாலை 4.30 இற்கு ஆரம்பிக்கவுள்ளது.
இலங்கை அணி முதற் போட்டியில் அயர்லாந்து அணியினை வெற்றி பெற்றுள்ள நிலையிலும், அவுஸ்திரேலியா அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்துள்ள நிலையிலும் இலங்கை அணியினால் அவுஸ்திரேலியா அணிக்கு அழுத்தம் வழங்கி வெற்றி பெற முடியும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இலங்கை அணியின் உபாதையடைந்த வீரர்களான பத்தும் நிஸ்ஸங்க, ப்ரமோட் மதுசான் ஆகியோர் இன்று அணிக்கு மீண்டும் திரும்புகின்றனர். இதன் காரணமாக இலங்கை அணி மேலும் பலம் பெறுகிறது.
மிக சிறியளவிலான மழை வாய்ப்பு காணப்படுவதாகவும், ஆனலும் போட்டி பாதிக்கப்படும் வாய்ப்புகள் குறைவாக காணப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டி நடைபெறவுள்ள மைதானம் புதிய மைதானம் என்ற காரணத்தினால் அதிகளவில் மைதானம் தொடர்பில் தகவல்கள் இல்லையெனவும், ஓட்டங்கள் அதிகம் பெறப்படும் வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இன்று இலங்கை அணி வெற்றி பெற்றால் அரை இறுதி வாய்ப்புகள் மிக அதிகமாக உருவாகும் என்ற நிலையிலும், அவுஸ்திரேலியா அணி தோல்வியடைந்தால் அவுஸ்திரேலியா அணிக்கான வாய்ப்புகள் இல்லாமல் போகும் என்ற நிலையிலும் போட்டி அதிக விறு விருப்பு தன்மையினை தருமென நம்பப்படுகிறது.