இங்கிலாந்துக்கு தண்ணி காட்டிய அயர்லாந்து

ICC T20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய முதற் போட்டியில் அயர்லாந்து அணி, இங்கிலாந்து அணியினை டக் வேர்த் லூயிஸ் முறையில் 05 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டபோது 14.3 ஓவர்களில் இங்கிலாந்து அணி 111 ஓட்டங்களை வெற்றி பெறுவதற்கு பெற்றிருக்க வேண்டும். இருப்பினும் 105 ஓட்டங்களை மாத்த்திரமே பெற்றிருந்தது. அதன் காரணமாக அயர்லாந்து அணி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

158 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கோடு துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலே அயர்லாந்து அணியின் பந்துவீச்சுக்கு தடுமாறி வந்தது. முக்கிய துடுப்பாட்ட வீரர்கள் பிரகாசிக்க தவற அயர்லாந்தின் கரங்கள் உயர்ந்தன. தடுமாறி போயிருந்த இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டதை மொயீன் அலி மற்றும் டாவிட் மலான் ஆகியோர் உயாத்தி கொடுத்தனர். அதன் காரணமாக போராடக்கூடிய நிலை இங்கிலாந்து அணிக்கு ஏற்பட்டது. இருப்பினும் மழை தன் விளையாட்டையும் காட்ட இங்கிலாந்துக்கு தோல்வி முடிவானது.

முதலில் துடுப்பாடிய அயர்லாந்து அணி அதன் முக்கிய துடுப்பாட்ட வீரரான போல் ஸ்டெர்லிங்கின் விக்கெட்டினை ஆரம்பத்தில் இழந்த போதும் அணியின் தலைவர் சிறப்பாக துடுப்பாடி ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். அவரோடு லோகன் ரக்கர் நல்ல இணைப்பாட்டத்தை ஏற்படுத்தி கொடுத்தார். அதன் மூலம் ஓட்ட எண்ணிக்கை உயர்ந்தது. இருப்பினும் பின் மத்திய வரிசை இங்கிலாந்து பந்து வீச்சாளர்களினால் தகர்க்கப்பட ஓட்ட எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டது.

லியாம் லிவிங்ஸ்ட்டன், மார்க்வூட் ஆகியோர் அயர்லாந்து துடுப்பாட்ட வீரர்களை தடுமாற வைத்த அதேவேளை, தலா மூன்று விக்கெட்களை கைப்பற்றினர்.

இந்த தோல்வியின் மூலம் இங்கிலாந்து அணி நான்காமிடத்துக்கு பின் தள்ளப்பட்டுள்ளது. இலங்கை அணி இரண்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளது. அயர்லாந்து அணி மூன்றாமிடத்துக்கு முன்னேறியுள்ளது.

போட்டி மழை காரணமாக தாமதித்து ஆரம்பித்த அதேவேளை, போட்டி நடைபெறும் போதும் இடை இடையே தடைப்பட்டது.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
ஜோஷ் பட்லர்பிடி – லொர்கான் டக்கர்ஜோஷ் லிட்டில்000200
அலெக்ஸ் ஹேல்ஸ்பிடி –  மார்க் அடைர்ஜோஷ் லிட்டில்070510
டாவிட்   மலான்பிடி – பியோன் ஹான்ட்பரி மக்கர்தி353720
பென் ஸ்டோக்ஸ்BOWELDபியோன் ஹான்ட்060800
ஹரி ப்ரூக்பிடி – கரத் டெலனிஜோர்ஜ் டொக்ரல்182110
மொயின் அலி  241231
லியாம் லிவிங்ஸ்டன்  010200
       
       
       
       
உதிரிகள்  14   
ஓவர்  14.3விக்கெட்   5மொத்தம்105   
பந்துவீச்சாளர்ஓ.ஓஓட்டவிக்
ஜோஷ் லிட்டில்03001602
 மார்க் அடைர்02001000
பரி மக்கர்தி02001401
பியோன் ஹான்ட்02001701
கரத் டெலனி02001201
ஜோர்ஜ் டொக்ரல்01000501

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
போல் ஸ்டெர்லிங்பிடி – சாம் கரண்மார்க் வூட்140811
அண்டி பல்பிரிணிபிடி – ஜோஷ் பட்லர்லியாம் லிவிங்ஸ்டன்624752
லொர்கான் டக்கர்Run Out 342731
ஹரி டெக்டர்பிடி – ஜோஷ் பட்லர்மார்க் வூட்000200
கர்டிஸ் கம்பர்பிடி – ஜோஷ் பட்லர்மார்க் வூட்181130
ஜோர்ஜ் டொக்ரல்BOWELDலியாம் லிவிங்ஸ்டன்000100
கரத் டெலனி  121010
மார்க் அடைர்பிடி – சாம் கரண்லியாம் லிவிங்ஸ்டன்040400
பரி மக்கர்தி BOWELDசாம் கரண்030300
பியோன் ஹான்ட்BOWELDசாம் கரண்010200
ஜோஷ் லிட்டில்பிடி – ஜோஷ் பட்லர் 000100
உதிரிகள்  09   
ஓவர்  19.2விக்கெட்  10மொத்தம்157   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
பென் ஸ்டோக்ஸ்2.2000801
கிறிஸ் வோக்ஸ்03004100
மார்க் வூட்04003403
சாம் கரண்03002102
அடில் ரஷீத்04002400
லியாம் லிவிங்ஸ்டன்03001703
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version