ICC T 20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியா, தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையில் அவுஸ்திரேலியா பேர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இந்தியா அணி தடுமாறி சவால் வழங்க கூடிய எண்ணிக்கையினை பெற்றுள்ளது. இந்தப் போட்டிக்காக தென்னாபிரிக்கா அணிக்கு அழைக்கப்பட்ட லுங்கி ங்டி இந்தியா அணியின் ஆரம்ப விக்கெட்களை பதம் பார்த்தார். அபாரமான பந்துவீச்சின் மூலம் நான்கு விக்கெட்களை கைப்பற்றி இந்தியா அணியினை தடுமாற வைத்தார். நிதானமாக துடுப்பாடிய சூர்யகுமார் யாதவ் இந்தியா அணியினை மீட்டெடுத்தார். யாதவ், கார்த்திக் இணைப்பாட்டம் இந்தியா அணியினை மீட்டெடுத்தது. இந்த ஜோடிக்கு பந்துவீசிய ங்டி 12 ஓட்டங்களை வழங்கினார்.
கார்த்திக், யாதவ் ஜோடி ஆறாவது விக்கெட் இணைப்பாட்டமாக 52 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர். இதில் கார்த்திக் 6 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டார். இறுதிவரை துடுப்பாடிய சூரியகுமார் யாதவ் பெற்றுக்கொண்ட ஓட்டங்கள் மூலம் இந்தியா அணி 133 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. சூர்யா தனித்து நின்று ஒரு பக்கமாக ஓட்டங்களை பெற மறுபக்கமாக விக்கெட்கள் வீழந்தமை இந்தியா அணிக்கு பெரும் பின்னடைவை தந்தது.
ஆரம்பம் முதல் மிகவும் இறுக்கமாக பந்துவீசிய வெய்ன் பார்னல் இறுதி நேரத்தில் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்களை கைப்பற்றி இந்தியா அணிக்கு தலையிடி வழங்கினார்.
இந்த அணி தென்னாபிரிக்கா அணிக்கும் சவாலான ஓட்ட எண்ணிக்கை என்றே கருதப்படுகிறது. இந்தியா வெற்றி பெறுமென நம்பக்கூடிய ஓட்ட எண்ணைக்கையில்லை.
அணி விபரம்
இரு அணிகளும் தலா ஒவ்வொரு மாற்றங்களை செய்துள்ளன.
இந்தியா அணி சார்பாக அக்ஷர் பட்டேல் நீக்கப்பட்டு தீபக் ஹூடா அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளார். தென்னாபிரிக்கா அணி சார்பாக ரப்ரைஸ் ஷம்ஸி நீக்கப்பட்டு லுங்கி ங்டி சேர்க்கபப்ட்டுள்ளார்.
தென்னாபிரிக்கா
ரெம்பா பவுமா, குயின்டன் டி கொக், ரிலி ரொஸவ், ரிஸ்டன் ஸ்டப்ஸ், எய்டன் மார்க்ராம், டேவிட் மில்லர், ககிஷோ ரபாடா, வெய்ன் பார்னல் , அன்றிச் நோக்யா, கேஷவ் மஹாராஜ், லுங்கி ங்டி
இந்தியா
ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராஹுல், விராட் கோலி, சூரியகுமார் யாதவ், ஹார்டிக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், தீபக் ஹூடா , ரவிச்சந்திரன் அஷ்வின், மொஹமட் ஷமி, புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங்
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| லோகேஷ் ராஹுல் | பிடி – எய்டன் மார்க்ராம் | லுங்கி ங்டி | 09 | 14 | 0 | 1 |
| ரோஹித் ஷர்மா | பிடி – லுங்கி ங்டி | லுங்கி ங்டி | 15 | 14 | 1 | 1 |
| விராட் கோலி | பிடி – ககிஷோ ரபாடா | லுங்கி ங்டி | 12 | 11 | 2 | 0 |
| சூரியகுமார் யாதவ் | பிடி – கேஷவ் மஹாராஜ் | வெய்ன் பார்னல் | 68 | 40 | 6 | 2 |
| தீபக் ஹூடா | பிடி – குயின்டன் | அன்றிச் நோக்யா | 00 | 03 | 0 | 0 |
| ஹார்டிக் பாண்ட்யா | பிடி – ககிஷோ ரபாடா | லுங்கி ங்டி | 02 | 03 | 0 | 0 |
| தினேஷ் கார்த்திக் | பிடி – ரிலி ரொஸவ் | வெய்ன் பார்னல் | 06 | 15 | 0 | 0 |
| ரவிச்சந்திரன் அஷ்வின் | பிடி – ககிஷோ ரபாடா | வெய்ன் பார்னல் | 07 | 11 | 0 | 0 |
| புவனேஷ்வர் குமார் | 04 | 06 | 0 | 0 | ||
| மொஹமட் ஷமி | Run Out | 00 | 02 | 0 | 0 | |
| அர்ஷ்தீப் சிங் | 02 | 00 | 0 | 0 | ||
| உதிரிகள் | 08 | |||||
| ஓவர் 20 | விக்கெட் 09 | மொத்தம் | 133 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| வெய்ன் பார்னல் | 04 | 01 | 15 | 03 |
| ககிஷோ ரபாடா | 04 | 00 | 26 | 00 |
| லுங்கி ங்டி | 04 | 00 | 29 | 04 |
| அன்றிச் நோக்யா | 04 | 00 | 23 | 01 |
| கேஷவ் மஹாராஜ் | 03 | 00 | 28 | 00 |
| எய்டன் மார்க்ராம் | 01 | 00 | 05 | 00 |
போட்டிக்கு முன்னதாக செய்யப்பட்ட வீடியோ தொகுப்பு