இந்தியா, குஜராத்தில் பாலம் உடைந்து விழுந்தத விபத்தில் இறந்தவர்களுக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கவலை வெளியிட்டுள்ளார். நேற்று மாலை குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் அமைந்துள்ள இங்கிலாந்து காலத்து பாலம் உடைந்து வீழ்ந்துள்ளது. அதன் போது பலர் நீருக்குள் விழுந்து காணாமல் போயுள்ளனர் . அவர்களில் 147 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 177 பேர் உயிரோடு காப்பாற்றப்பட்டுள்ளனர். தேடுதல் நடவடிக்கைகள் தொடர்வதாக இந்தியா செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான நிலையில் இந்தியா அரசாங்கத்துக்கும், இந்திய மக்களுக்கும் இலங்கை ஜனாதிபதி தனது அனுதாப செய்தியினை அனுப்பி வைத்துள்ளார்.
நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியளிப்பதாகவும் தானும், இலங்கை மக்களும் கவலையடைந்துள்ளதாகவும், இலங்கை மக்கள் இந்த துயர சம்பவத்தில் பங்கெடுத்து கொள்வதகாவும் ஜனாதிபதி அனுதாப செய்தியில் மேலும் கூறியுள்ளார்.
இந்த பாலம் திருத்த பணிகளுக்காக 7 மாதங்கள் மூடப்பட்டிருந்ததாகவும், இம்மாதம் 26 ஆம் திகதியே திறந்து வைக்கப்பட்டதாகவும் குஜராத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.