ICC T 20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இன்று (05.11) நடைபெற்ற குழு 01 இற்கான போட்டியில் போட்டியில் இலங்கை அணியினை 04 விக்கெட்களினால் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளது.
142 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய இங்கிலாந்து அணி இறுதி ஓவரில் வெற்றியினை தனதாக்கியது. அதிரடி ஆரம்பத்தை ஏற்படுத்திய இங்கிலாந்து அணி மத்திய வரிசையில் தடுமாறியது. பின்னர் நிதானமாக துடுப்பாடிய இங்கிலாந்து அணி அழுத்தங்களின்றி வெற்றியினை நோக்கி நகர்ந்தது.
வனிந்து ஹசரங்க 2 விக்கெட்களை கைப்பற்றி கூடுதலான 15 விக்கெட்களோடு முதலிடத்தில் காணப்படுகின்றார்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று இலங்கை அணி முதலில் துடுப்பாடியது. இன்று போட்டி நடைபெற்ற மைதானத்தில் முதலில் துடுப்பாடிய அணிகளே வெற்றி பெற்றுள்ளன. இருப்பினும் இன்று இங்கிலாந்து அந்த நிலையினை மாற்றியது.
இலங்கை அணி சிறப்பாக ஆரம்பத்தை மேற்கொண்டது. அதிரடியாக துடுப்பாடி வந்த நிலையில் அடுத்தடுத்து விக்கெட்கள் வீழ்த்தப்பட்டதால் இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டது. பத்தும் நிசங்க நிதானமாகவும் அதிரடியாகவும் துடுப்பாடினார்.
குழு 01 இல் இருந்து நியூசிலாந்து அணி முதலிடத்தையும், இங்கிலாந்து அணி இரண்டாம் இடத்தையும் பெற்று அரை இறுதிப் போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளன.
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
ஜோஷ் பட்லர் | பிடி – சாமிக்க கருணாரட்ன | வனிந்து ஹசரங்க | 28 | 23 | 2 | 1 |
அலெக்ஸ் ஹேல்ஸ் | பிடி – வனிந்து ஹசரங்க | வனிந்து ஹசரங்க | 47 | 30 | 7 | 1 |
பென் ஸ்டோக்ஸ் | 42 | 36 | 2 | 0 | ||
ஹரி ப்ரூக் | பிடி – தனஞ்சய டி சில்வா | தனஞ்சய டி சில்வா | 04 | 05 | 0 | 0 |
லியாம் லிவிங்ஸ்டன் | பிடி – தனஞ்சய டி சில்வா | 04 | 06 | 0 | 0 | |
மொயின் அலி | பிடி – தஸூன் ஷானக | தனஞ்சய டி சில்வா | 01 | 05 | 0 | 0 |
சாம் கரண் | பிடி – கசுன் ராஜித | லஹிரு குமரா | 06 | 11 | 0 | 0 |
கிறிஸ் வோக்ஸ் | 05 | 03 | 1 | 0 | ||
உதிரிகள் | 07 | |||||
ஓவர் 19.4 | விக்கெட் 6 | மொத்தம் | 144 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
மஹேஷ் தீக்ஷண | 04 | 00 | 22 | 00 |
கசுன் ராஜித | 03 | 00 | 40 | 00 |
லஹிரு குமரா | 3.4 | 00 | 24 | 02 |
வனிந்து ஹசரங்க | 04 | 00 | 23 | 02 |
தனஞ்சய டி சில்வா | 04 | 00 | 24 | 02 |
சரித் அசலங்க | 01 | 00 | 08 | 00 |
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
பத்தும் நிஸ்ஸங்க | பிடி – கிறிஸ் ஜோர்டன் | அடில் ரஷீத் | 67 | 45 | 2 | 5 |
குசல் மென்டிஸ் | பிடி – லியாம் லிவிங்ஸ்டன் | கிறிஸ் வோக்ஸ் | 18 | 14 | 1 | 1 |
தனஞ்சய டி சில்வா | பிடி – பென் ஸ்டோக்ஸ் | சாம் கரண் | 09 | 11 | 0 | 0 |
சரித் அசலங்க | பிடி – டேவிட் மலான் | பென் ஸ்டோக்ஸ் | 08 | 09 | 0 | 0 |
பானுக ராஜபக்ச | பிடி – சாம் கரண் | மார்க் வூட் | 22 | 22 | 3 | 0 |
தஸூன் ஷானக | பிடி – ஜோஷ் பட்லர் | மார்க் வூட் | 03 | 08 | 0 | 0 |
வனிந்து ஹசரங்க | Run out | 09 | 09 | 1 | 0 | |
சாமிக்க கருணாரட்ன | NOT OUT | 00 | 01 | 0 | 0 | |
மஹீஷ் தீக்ஷன | பிடி – அலெக்ஸ் ஹேல்ஸ் | மார்க் வூட் | 00 | 01 | 0 | 0 |
உதிரிகள் | 05 | |||||
ஓவர் 20 | விக்கெட் 08 | மொத்தம் | 141 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
பென் ஸ்டோக்ஸ் | 03 | 00 | 24 | 01 |
கிறிஸ் வோக்ஸ் | 03 | 00 | 24 | 01 |
மார்க் வூட் | 03 | 00 | 26 | 03 |
சாம் கரண் | 04 | 00 | 27 | 01 |
அடில் ரஷீத் | 04 | 00 | 16 | 01 |
லியாம் லிவிங்ஸ்டன் | 02 | 00 | 16 | 00 |
மொயின் அலி | 01 | 00 | 05 | 00 |
குழு 1
அணிகள் | வி. போ | வெற்றி | தோல்வி | கைவிடப்பட்ட போட்டிகள் | புள்ளிகள் | ஓ.ச.வே |
நியூசிலாந்து | 05 | 03 | 01 | 01 | 07 | 2.113 |
இங்கிலாந்து | 05 | 03 | 01 | 01 | 07 | 0.473 |
அவுஸ்திரேலியா | 05 | 03 | 01 | 01 | 07 | -0.173 |
இலங்கை | 05 | 02 | 03 | 00 | 04 | -0.422 |
அயர்லாந்து | 05 | 01 | 03 | 01 | 03 | -1.615 |
ஆப்கானிஸ்தான் | 05 | 00 | 03 | 02 | 02 | -0.571 |