ICC T20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் தென்னாபிரிக்கா, நெதர்லாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து அணி 13 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. இந்த அதிர்ச்சி தோல்வியின் மூலமாக தென்னாபிரிக்கா அணி அரை இறுதி வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்து நடைபெறவுள்ள பாகிஸ்தான், பங்களாதேஷ் போட்டி கைவிடப்பட்டால் மாத்திரமே தென்னாபிரிக்கா அணி அரை இறுதிப் போட்டிக்கு தெரிவாகும். இவ்வாறான நிலையில் அந்தப் போட்டியில் வெற்றி பெறுமணி அரை இறுதி வாய்ப்பை பெறும்.
உலக கிண்ண தொடர்களில் தென்னாபிரிக்கா அணி துரதிஷ்டவசமாக அரை இறுதி வாய்ப்புகளை இவ்வாறு இழப்பது முதற் தடவையல்ல.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று தென்னாபிரிக்கா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய நெதர்லாந்து அணி வலுவான ஓட்ட எண்ணிக்ககையினை பெற்றுக்கொண்டது. இந்த ஓட்ட எண்ணிக்கை வெற்றி பெறக்கூடிய ஓட்ட எண்ணிக்ககையாக மாறியது. நெதர்லாந்து அணி சார்பாக முன் வரிசை துடுப்பாட்ட வீரர்கள் பெற்றுக்கொண்ட ஓட்டங்கள் மூலமாக இந்த ஓட்ட எண்ணிக்கையினை பெற முடிந்தது. பலமான தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சாளர்களினால் நெதர்லாந்து அணியின் நான்கு விக்கெட்களை மாத்திரமே கைப்பற்ற முடிந்தது.
பதிலுக்கு துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி ஆரம்பம் முதலே விக்கட்களை தொடர்ந்து இழந்தது. இதன் காரணமாக தடுமாறி வெற்றி பெறுவார்களா என்ற நிலை உருவானது. தென்னாபிரிக்காவின் அதிரடி துடுப்பாட்ட வீரர்கள் யாரும் எதிர்பாராத விதமாக தடுமாறி போனார்கள். ஐந்தாவது விக்கெட்டுக்காக இணைந்த டேவிட் மில்லர், ஹென்றிச் க்ளாஸான் ஆகியோர் நிதானமாக இணைப்பாட்டத்தை உருவாக்கி அதிரடியினை ஆரம்பிக்க மில்லர் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் மீண்டும் விக்கெட்கள் வீழ்த்தப்பட தென்னாபிரிக்க அணி தோல்வியை பெற்றது.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| குயின்டன் டி கொக் | பிடி – ஸ்கொட் எட்வெர்ட்ஸ் | பிரெட் க்ளாஸென் | 13 | 13 | 1 | 1 |
| ரெம்பா பவுமா | BOWELD | போல் வன் மீகறென் | 20 | 20 | 2 | 0 |
| ரிலி ரொஸவ் | பிடி – மக்ஸ் ஓ டொவ்ட் | ப்ரண்டன் க்ளொவர் | 25 | 19 | 2 | 0 |
| எய்டன் மார்க்ராம் | பிடி – ஸ்டீபன் மேபேர்க் | பிரெட் க்ளாஸென் | 17 | 13 | 2 | 0 |
| டேவிட் மில்லர் | பிடி – வன் டெர் மெர்வ் | ப்ரண்டன் க்ளொவர் | 17 | 17 | 1 | 0 |
| ஹென்றிச் க்ளாஸென் | பிடி – பிரெட் க்ளாஸென் | பஸ் டி லீட் | 21 | 18 | 0 | 1 |
| வெய்ன் பார்னல் | பிடி – ஸ்கொட் எட்வெர்ட்ஸ் | ப்ரண்டன் க்ளொவர் | 00 | 02 | 0 | 0 |
| கேஷவ் மஹாராஜ் | பிடி – மக்ஸ் ஓ டொவ்ட் | பஸ் டி லீட் | 13 | 12 | 0 | 1 |
| ககிஷோ ரபாடா | NOT OUT | 09 | 08 | 0 | 0 | |
| அன்றிச் நோக்யா | NOT OUT | 04 | 01 | 1 | 0 | |
| உதிரிகள் | 06 | |||||
| ஓவர் 20 | விக்கெட் 08 | மொத்தம் | 145 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| பிரெட் க்ளாஸென் | 04 | 00 | 20 | 02 |
| போல் வன் மீகறென் | 03 | 00 | 33 | 01 |
| கொலின் அக்கேர்மான் | 03 | 00 | 16 | 00 |
| ரோலோப் வன் டெர் மெர்வ் | 02 | 00 | 19 | 00 |
| ப்ரண்டன் க்ளொவர் | 02 | 00 | 09 | 03 |
| லோகன் வன் பீக் | 03 | 00 | 23 | 00 |
| பஸ் டி லீட் | 03 | 00 | 25 | 02 |
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| ஸ்டீபன் மேபேர்க் | பிடி – ரிலி ரொஸவ் | எய்டன் மார்க்ராம் | 37 | 30 | 7 | 0 |
| மக்ஸ் ஓ டொவ்ட் | பிடி – ககிஷோ ரபாடா | கேஷவ் மஹாராஜ் | 29 | 31 | 1 | 1 |
| டொம் கூப்பர் | பிடி – குயின்டன் டி கொக் | கேஷவ் மஹாராஜ் | 35 | 19 | 2 | 2 |
| கொலின் அக்கேர்மான் | NOT OUT | 41 | 26 | 3 | 2 | |
| பஸ் டி லீட் | BOWELD | அன்றிச் நோக்யா | ||||
| ஸ்கொட் எட்வெர்ட்ஸ் | NOT OUT | 12 | 07 | 2 | 0 | |
| உதிரிகள் | 03 | |||||
| ஓவர் 20 | விக்கெட் 04 | மொத்தம் | 158 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| வெய்ன் பார்னல் | 04 | 00 | 32 | 00 |
| ககிஷோ ரபாடா | 03 | 00 | 37 | 00 |
| லுங்கி ங்கிடி | 03 | 00 | 35 | 00 |
| அன்றிச் நோக்யா | 04 | 00 | 10 | 01 |
| கேஷவ் மஹாராஜ் | 04 | 00 | 27 | 02 |
| எய்டன் மார்க்ராம் | 02 | 00 | 16 | 01 |