தென்னாபிரிக்க உலக கிண்ணத்திலிருந்து வெளியேற்றம்.

ICC T20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் தென்னாபிரிக்கா, நெதர்லாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து அணி 13 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. இந்த அதிர்ச்சி தோல்வியின் மூலமாக தென்னாபிரிக்கா அணி அரை இறுதி வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்து நடைபெறவுள்ள பாகிஸ்தான், பங்களாதேஷ் போட்டி கைவிடப்பட்டால் மாத்திரமே தென்னாபிரிக்கா அணி அரை இறுதிப் போட்டிக்கு தெரிவாகும். இவ்வாறான நிலையில் அந்தப் போட்டியில் வெற்றி பெறுமணி அரை இறுதி வாய்ப்பை பெறும்.

உலக கிண்ண தொடர்களில் தென்னாபிரிக்கா அணி துரதிஷ்டவசமாக அரை இறுதி வாய்ப்புகளை இவ்வாறு இழப்பது முதற் தடவையல்ல.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று தென்னாபிரிக்கா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய நெதர்லாந்து அணி வலுவான ஓட்ட எண்ணிக்ககையினை பெற்றுக்கொண்டது. இந்த ஓட்ட எண்ணிக்கை வெற்றி பெறக்கூடிய ஓட்ட எண்ணிக்ககையாக மாறியது. நெதர்லாந்து அணி சார்பாக முன் வரிசை துடுப்பாட்ட வீரர்கள் பெற்றுக்கொண்ட ஓட்டங்கள் மூலமாக இந்த ஓட்ட எண்ணிக்கையினை பெற முடிந்தது. பலமான தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சாளர்களினால் நெதர்லாந்து அணியின் நான்கு விக்கெட்களை மாத்திரமே கைப்பற்ற முடிந்தது.

பதிலுக்கு துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி ஆரம்பம் முதலே விக்கட்களை தொடர்ந்து இழந்தது. இதன் காரணமாக தடுமாறி வெற்றி பெறுவார்களா என்ற நிலை உருவானது. தென்னாபிரிக்காவின் அதிரடி துடுப்பாட்ட வீரர்கள் யாரும் எதிர்பாராத விதமாக தடுமாறி போனார்கள். ஐந்தாவது விக்கெட்டுக்காக இணைந்த டேவிட் மில்லர், ஹென்றிச் க்ளாஸான் ஆகியோர் நிதானமாக இணைப்பாட்டத்தை உருவாக்கி அதிரடியினை ஆரம்பிக்க மில்லர் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் மீண்டும் விக்கெட்கள் வீழ்த்தப்பட தென்னாபிரிக்க அணி தோல்வியை பெற்றது.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
குயின்டன் டி கொக்பிடி – ஸ்கொட் எட்வெர்ட்ஸ்பிரெட் க்ளாஸென்131311
ரெம்பா பவுமாBOWELDபோல் வன் மீகறென்202020
ரிலி ரொஸவ் பிடி – மக்ஸ் ஓ டொவ்ட்ப்ரண்டன் க்ளொவர்251920
எய்டன் மார்க்ராம்பிடி – ஸ்டீபன் மேபேர்க்பிரெட் க்ளாஸென்171320
டேவிட் மில்லர்பிடி – வன் டெர் மெர்வ்ப்ரண்டன் க்ளொவர்171710
ஹென்றிச் க்ளாஸென்பிடி – பிரெட் க்ளாஸென்பஸ் டி லீட்211801
வெய்ன் பார்னல்பிடி – ஸ்கொட் எட்வெர்ட்ஸ்ப்ரண்டன் க்ளொவர்000200
கேஷவ் மஹாராஜ்பிடி – மக்ஸ் ஓ டொவ்ட்பஸ் டி லீட்131201
ககிஷோ ரபாடாNOT OUT 090800
அன்றிச் நோக்யாNOT OUT 040110
       
உதிரிகள்  06   
ஓவர்  20விக்கெட்  08மொத்தம்145   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
பிரெட் க்ளாஸென்04002002
போல் வன் மீகறென்03003301
கொலின் அக்கேர்மான்03001600
ரோலோப் வன் டெர் மெர்வ்02001900
ப்ரண்டன் க்ளொவர்02000903
லோகன் வன் பீக்03002300
பஸ் டி லீட்03002502
வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
ஸ்டீபன் மேபேர்க்பிடி – ரிலி ரொஸவ்எய்டன் மார்க்ராம்373070
மக்ஸ் ஓ டொவ்ட்பிடி – ககிஷோ ரபாடாகேஷவ் மஹாராஜ்293111
டொம் கூப்பர்பிடி – குயின்டன் டி கொக்கேஷவ் மஹாராஜ்351922
கொலின் அக்கேர்மான்NOT OUT 412632
பஸ் டி லீட்BOWELDஅன்றிச் நோக்யா    
ஸ்கொட் எட்வெர்ட்ஸ்NOT OUT 120720
       
       
       
       
       
உதிரிகள்  03   
ஓவர்  20விக்கெட்  04மொத்தம்158   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
வெய்ன் பார்னல்04003200
ககிஷோ ரபாடா03003700
லுங்கி ங்கிடி03003500
அன்றிச் நோக்யா04001001
கேஷவ் மஹாராஜ்04002702
எய்டன் மார்க்ராம்02001601

Social Share

Leave a Reply