கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் குற்றச்சாட்டில் கைது

ICC T20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்குபற்ற சென்ற இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக அவுஸ்திரேலியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் ஒருவருடன் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக அவர் மீது வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட தனுஷ்க குணதிலக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கான பிணை மறுக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை சிட்னியில் உள்ள விடுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 29 வயதான பெண் ஒருவர் கடந்த சில தினங்களாக கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவை சந்திக்க முயன்று, கோரிக்கைகளை முன்வைத்த நிலையில் கடந்த 02 ஆம் திகதி இருவரும் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின் போது வீடொன்றில் தனுஷ்க குணதிலக தவறாக நடந்துகொள்ள முயற்சித்துள்ளார் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தனுஷ்க குணதிலக ஏற்கனவே இங்கிலாந்து தொடரின் போது விதிமுறைகளை தாண்டி விடுதியினை விட்டு வெளியே சென்ற குற்றச்சாட்டில் இலங்கை கிரிக்கெட்டினால் ஒரு வருடம் தடை செய்யபப்ட்டிருந்து அண்மையிலேயே மீண்டும் விளையாட அனுமதிக்கப்பட்டார்.

Social Share

Leave a Reply