T20 உலககிண்ணம் அரை இறுதிப் போட்டி? பாகிஸ்தான், நியூசிலாந்து வெற்றி வாய்ப்பு யாருக்கு? வீடியோவை முழுமையாக பாருங்கள்.
ICC T20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரை இறுதிப்போட்டி இன்று அவுஸ்திரேலியா சிட்டினியில் நடைபெறவுள்ளது. இலங்கை நேரப்படி பகல் 1.30 இற்கு இந்தப் போட்டி ஆரம்பிக்கவுள்ளது.
குழு 01 இல் நியூசிலாந்து அணி முதலிடத்தையும், குழு 02 இல் இரண்டாமிடத்தை பெற்றுள்ள பாகிஸ்தான் அணியும் முதலாவது அரை இறுதிப் போட்டியில் மோதுகின்றன.
நியூசிலாந்து அணி கடந்த உலக கிண்ண தொடரில் இறுதிப் போட்டிக்குத் தெரிவானது. பாகிஷ்தான் அணி 2007 ஆம் ஆண்டு உலக கிண்ண தொடரில் இறுதிப் போட்டிக்குத் தெரிவானது. 2009 ஆம் ஆண்டு சம்பியனாக வெற்றி பெற்றது. அதன் பின்னர் இறுதிப்போட்டிக்குத்தெரிவானதில்லை. இந்த காலப்பகுதிக்குள் நான்கு தடவைகள் பாகிஸ்தான் அணி அரை இறுதிப் போட்டிக்குத் தெரிவானது. கடந்த முறையும் அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது.
இன்று நடைபெறவுள்ள போட்டியின் சிட்னி மைதானம் ஓட்டங்கள் பெறப்படக்கூடிய தட்டையான ஆடுகளம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மழைக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மழை காரணமாக போட்டி நிறுத்ததப்பட்டால் நாளைய தினம் விட்ட இடத்திலிருந்து தொடரும. போட்டியின் முடிவு பெறப்பட இரு அணிகளும் குறடைந்தது 10 ஓவர்கள் பூர்த்தி செய்திருக்க வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.