ICC T20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி அதிரடி வெற்றி ஒன்றினை இந்தியா அணிக்கெதிராக பெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவானது. அவுஸ்திரேலியா, அடிலயட்டில் நடைபெற்ற இந்தப் போட்டியில் விக்கெட் இழப்புகளின்றி 169 என்ற வெற்றியிலக்கினை துரதியடித்து 10 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணி மூன்றாவது தடவையாக இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் மிக அபாரமாக இந்தியா அணியின் பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு அதிரடியாக அடித்தாடி வெற்றி பெற்றனர். இந்த உலக கிண்ண தொடரின் சிறந்த வெற்றியாக இந்த வெற்றியினை கணிப்பிடலாம்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. முதலில் துடுப்பாடிய இந்தியா அணி 20 ஓவர்களில் 06 விக்கெட்களை இழந்து 168 ஓட்டங்களை பெற்றது.
ஆரம்பம் முதல் விக்கெட்களை இழந்த இந்தியா அணி பெரிய ஓட்ட எண்ணிக்கை ஒன்றை நோக்கி நகர முடியவில்லை. விராத் கோலி நிதானமாக துடுப்பாடி இந்தியா அணியின் ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தினார். கோலி, பாண்ட்யாவின் இணைப்பாட்டம் இந்தியா அணியின் ஓட்ட எண்ணிக்கையினை ஓரளவு உயர்த்தி கொடுத்தது. ஹர்டிக் பாண்ட்யா இறுதி நேரத்தில் அதிரடியாக துடுப்பாடி ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தினார்.
இந்தப் போட்டிக்காக அழைக்கப்பட்ட க்றிஸ் ஜோர்டான் 03 விக்கெட்களை கைப்பற்றினார்.
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மெல்பேர்னில் நடைபெறவுள்ளது.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| ஜோஷ் பட்லர் | 80 | 49 | 9 | 3 | ||
| அலெக்ஸ் ஹேல்ஸ் | 86 | 47 | 4 | 7 | ||
| உதிரிகள் | 04 | |||||
| ஓவர் 16 | விக்கெட் 00 | மொத்தம் | 170 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| புவனேஷ்வர் குமார் | 02 | 00 | 25 | 00 |
| அர்ஷ்தீப் சிங் | 02 | 00 | 15 | 00 |
| அக்ஷர் படேல் | 04 | 00 | 30 | 00 |
| மொஹமட் ஷமி | 03 | 00 | 39 | 00 |
| ரவிச்சந்திரன் அஷ்வின் | 02 | 00 | 27 | 00 |
| ஹார்டிக் பாண்ட்யா | 03 | 00 | 34 | 00 |
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| லோகேஷ் ராஹுல் | பிடி – ஜோஷ் பட்லர் | கிறிஸ் வோக்ஸ் | 05 | 05 | 1 | 0 |
| ரோஹித் ஷர்மா | பிடி – சாம் கரண் | க்றிஸ் ஜோர்டான் | 27 | 28 | 4 | 0 |
| விராட் கோலி | பிடி – அடில் ரஷீத் | க்றிஸ் ஜோர்டான் | 50 | 40 | 4 | 1 |
| சூரியகுமார் யாதவ் | பிடி – பில் சோல்ட் | அடில் ரஷீத் | 14 | 10 | 1 | 1 |
| ஹார்டிக் பாண்ட்யா | Hit Wicket | க்றிஸ் ஜோர்டான் | 63 | 33 | 4 | 5 |
| ரிஷாப் பான்ட் | Run out | 06 | 03 | 1 | 0 | |
| ரவிச்சந்திரன் அஷ்வின் | 00 | 00 | 0 | 0 | ||
| அக்ஷர் படேல் | ||||||
| உதிரிகள் | 03 | |||||
| ஓவர் 20 | விக்கெட் 06 | மொத்தம் | 168 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| பென் ஸ்டோக்ஸ் | 02 | 00 | 18 | 00 |
| கிறிஸ் வோக்ஸ் | 03 | 00 | 24 | 01 |
| சாம் கரண் | 04 | 00 | 42 | 00 |
| அடில் ரஷீத் | 04 | 00 | 20 | 01 |
| லியாம் லிவிங்ஸ்டன் | 03 | 00 | 21 | 00 |
| க்றிஸ் ஜோர்டான் | 04 | 00 | 43 | 03 |
