உலக கிண்ணத்தில் இலங்கை ஏமாற்றியதா? ஏறுமுகத்தில் செல்லும் இலங்கையின் எதிர்காலம்? தஸூனின் தலைமை?

உலக கிண்ணத்தில் இலங்கை ஏமாற்றியதா? ஏறுமுகத்தில் செல்லும் இலங்கையின் எதிர்காலம்?தஸூனின் தலைமை?V Media

உலக கிண்ண தொடரில் இலங்கை அணி தோல்வியடைந்து வெளியேறியுள்ளது. இந்த தோல்வி இலங்கை அணிக்கு ஏமாற்றம் என கூற முடியாது. தெரிவுகாண் போட்டிகள் ஊடாக இரண்டாம் சுற்றுக்கு தெரிவான இலங்கை அணி இந்தளவுக்கு சென்றதே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பலமான இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளை வெல்லுமளவுக்கு போதியளவு பலம் பெறவில்லை. ஆனால் பலமான அணியாக மாற முடியும். அதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

அடுத்த உலக கிண்ணம் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் இரண்டு வருடங்களில் அணியினை சிறப்பாக தயார் செய்ய முடியும்.

தஸூன் ஷானக சிறந்த சகலதுறை வீரராக அணிக்குள் செயற்படவேண்டுமெனில் அணி தலைமை பொறுப்பை வழங்குவது சிறந்தது. அழுத்தத்துக்கு, பயத்துக்கு மத்தியில் அவரினால் சிறந்த தலைவராக செயற்படுவதும் அதிரடி வீரராக தொடர்வதும் கடினம்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version