ICC T20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரின் இறுதிப் போட்டி நாளை(13.11) அவுஸ்திரேலியா, மெல்பேர்னில் நடைபெறவுள்ளது. பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியாக இந்தப் போட்டி நடைபெறவுள்ளது.
1992 ஆம் ஆண்டு உலக கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் மோதிய இரு அணிகளும் மீண்டும் 30 வருடங்களின் பின்னர் சந்திக்கவுள்ளன.
சம பல அணிகளுக்கிடையிலான போட்டியாக இந்தப் போட்டி கருதப்படுகிறது. இரு அணிகளும் கடுமையாக கிண்ணத்தை வெற்றி பெற போராடுமென நம்பப்படுகிறது. இருப்பினும் நாளைய தினம் கடுமையான மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக வாநிலை எதிர்வுகூறல் வழங்கப்பட்டுள்ளது.
போட்டியின் முடிவினை பெற இரு அணிகளும் குறைந்தது 10 ஓவர்களை பூர்த்தி செய்ய வேண்டுமென சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. மேலதிக நாளும் ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இரு நாட்களுமே கடுமையான மழைக்கான எதிர்வு கூறலே வழங்கப்பட்டுள்ளது.