ஐக்கிய மக்கள் சக்தியில் பொதுஜன பாரளுமன்ற உறுப்பினர்கள் இணைவு.

பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி சுயாதீனமாக இயங்கிய குழுவொன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இன்று (14.11) கூட்டணி அமைத்ததாக எதிர்க்கட்சி தலைவரின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுர பிரியதர்ஷன யாப்பா, சந்திம வீரக்கொடி, சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே,ஜோன் செனவிரத்ன, ஜயரத்ன ஹேரத், பிரியங்கர ஜயரத்ன ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவே இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டது.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைந்து செயற்படுவதற்கு இவ்வாறு முன்வந்தமைக்கு நன்றி தெரிவிப்பதாகவும், எதிர்காலத்தில் மேலும் வலுவாகவும் கூட்டாகவும் செயற்படுவதற்கு இந்த ஒற்றினைவு மிகவும் முக்கியமானது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த நிகழ்வில் தெரிவித்தார்.

நீண்டகாலமாக நடத்தப்பட்ட பல கலந்துரையாடல்களின் பிரதிபலனாக இவ்வாறு ஒன்றிணைந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் பலமான சக்தியாக ஐக்கிய மக்கள் கூட்டணியைக் கட்டியெழுப்புவதற்கு பங்களிப்பதாகவும் அனுர பிரியதர்ஷன யாப்பா இதன் போது தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version