வவுனியா சட்டத்தரணி சங்க செயலாளர் பொலிஸ் முறைப்பாடு

முகநூலில் அவதூறை ஏற்படுத்தியதாக இருவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வவுனியா சட்டத்தரணிகள் சங்க செயலாளர் சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் நேற்று (16.11) தெரிவித்துள்ளார்.

காணி உறுதி மோசடி தொடர்பில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சட்டத்தரணி உட்பட 6 பேர் நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த செய்தியை முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்த நபர்கள் இருவர் வவுனியாவைச் சேர்ந்த சிரேஸ்ட சட்டத்தரணியும், வவுனியா சட்டத்தரணிகள் சங்க செயலாளருமான அன்ரன் புனிதநாயகம் அவர்களது பெயரையும் தனது முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்து அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளன்.

இதன்மூலம், வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்திற்கும், சட்டத்தரணிகளுக்கும் அவதூறு ஏற்பட்டுள்ளதாகவும் முறைபாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இது தொடர்பில் மான நஸ்ட வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் சட்டத்தரணிகள் சங்க செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version