கட்டாரில் நடைபெற்று வரும் உலக கிண்ண காற்பந்தாட்ட தொடரின் இரண்டாம் நாளான இன்றைய முதற் போட்டியில் இங்கிலாந்து அணி ஈரான் அணியிணை 6 – 2 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்றுள்ளது.
குழு B இற்கான போட்டி இங்கிலாந்து, ஈரான் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. ஈரான் அணியின் கோல் காப்பாளர் அலிரெஷா பெய்றன்வன்ட் 20 ஆவது நிமிடத்தில் உபாதையடைந்து மைதானத்தை விட்டு வெளியேறினார். அதன் பின்னர் இங்கிலாந்து அணியின் கோல் மழை ஆரம்பித்தது.
இங்கிலாந்து அணி சார்பாக பெல்லிங்ஹாம் 35 ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். அதன் பின்னர் ஷகா 44 மற்றும் 62ஆவது நிமிடத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது கோலை அடித்தார். ஸ்ட்டேர்லிங் 46 ஆவது நிமிடத்திலும், ராஷ்போர்ட் 71 ஆவது நிமிடத்திலும், கிரேலிஷ் 90 ஆவது நிமிடத்திலும் கோல்களை பெற்றுக்கொண்டனர்.
ஈரான் அணி சார்பாக ரறேமி 65 ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். போட்டி நிறைவடைய சற்று முன்னர் கிடைத்த பனால்டி மூலமாக ரறேமி இரண்டாவது கோலை அடித்தார்.
இந்த வெற்றியும், கோல் எண்ணிக்கையும் இங்கிலாந்து அடுத்து சுற்றுக்கு தெரிவாவதனை இலகுபடுத்தியுள்ளது. முதலிட வாய்ப்புகளும் கிடைக்கும் நிலை காணப்படுகிறது.