கட்டாரில் நடைபெற்று வரும் உலக கிண்ண தொடரின் குழு D இற்கான போட்டி டுனீசியா, டென்மார்க் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இரு அணிகளும் கோல்களின்றி போட்டியினை நிறைவு செய்தது.
டென்மார்க் அணி ஐரோப்பாவின் பலமான அணி. தரப்படுத்தல்களில் பத்தாமிடத்தில் காணப்படுகிறது. முப்பதாமிடத்தில் காணப்படும் டுனீசியா அணி டென்மார்க் அணியினை வெற்றி பெறாது என்றே எதிர்பார்க்கப்பட்டது. இவ்வாறான நிலையில் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது அதிச்சியான முடிவாகவே கணிப்பிடப்படுகிறது.
இரு அணிகளும் ஆரம்பம் முதலே கோல்களை பெற எத்தனித்த போதும் கோல்களை பெற முடியாமல் போனது.