காற்பந்து உலக கிண்ணம் – பிரான்ஸ் அபாரம்.

கட்டாரில் நடைபெற்று வரும் உலக கிண்ண தொடரின் குழு D இற்கான போட்டியில் பிரான்ஸ் அணி அவுஸ்திரேலியா அணியினை 4-1 என இலகுவாக வெற்றி பெற்றது. போட்டி ஆரம்பித்த வேளையில் மிகவும் இறுக்கமாகவும், விறுவிறுப்பாகவும் சென்ற போட்டி இரண்டாம் பாதியில் பிரான்ஸ் பக்கமாக மாறி ஒரு பக்க போட்டியாக நிறைவடைந்தது.

போட்டி ஆரம்பித்து ஒன்பதாவது நிமிடத்தில் ஒலிவர் குட்வின் பெற்ற கோல் மூலமாக அவுஸ்திரேலியா அணி முன்னிலை பெற்றது. 27 ஆவது நிமிடத்தில் ஏட்ரியன் ரபியோட் அடித்த கோல் மூலமாக போட்டி சமநிலை அடைய 5 நிமிட இடைவேளையில் ஒலிவியர் ஜிரோட் அடித்த கோலின் மூலம் பிரான்ஸ் அணி முன்னிலை பெற்றது.

68 ஆவது நிமிடத்தில் கைலியன் மாப்பே தலையினால் போட்ட கோலின் மூலம் பிரான்ஸ் அணி வலுப்பெற்றது. மூன்று நிமிட இடைவெளியில் ஒலிவியர் ஜிரோட் இரண்டாவது கோலை அடித்து பிரான்ஸ் அணிக்காக அதிக கோல்கள் அடித்தவர் என்ற தியரி ஒன்றியின் சாதனையினை சமன் செய்தார். இந்த கோல் மூலமாக பிரான்ஸ் அணி 4-1 என முன்னிலை பெற்று அவ்வாறே போட்டியினை நிறைவு செய்தது.

பிரான்ஸ் அணியின் மத்திய மற்றும் முன் வரிசை வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். பிரான்ஸ் அணி இன்று விளையாடிய விதம் அவர்கள் இறுதிப் போட்டி வரை செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன என்ற நம்பிகையினை ஏற்படுத்தியுள்ளது.

 அணிபோட்டிவெற்றிதோல்விசமநிலைபுள்ளிகோ வித்அடி.கோ    பெ.கோ
1பிரான்ஸ்0101000003030401
2டுனீசியா0100000101000000
3டென்மார்க் 0100000100000000
4அவுஸ்திரேலியா0100010000-030104
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version