கட்டாரில் நடைபெற்று வரும் உலக கிண்ண காற்பந்தாட்ட தொடரின் இன்றைய முதற் போட்டியில் குரேஷியா, மொரோக்கோ அணிகள் மோதின. இந்தப் போட்டி கோல்களின்றி சமநிலையில் முடிவுக்கு வந்தது.
கடந்த உலக கிண்ண தொடரின் இறுதிப் போட்டியணி குரேஷியா, மொரோக்கோ அணியுடன் சமநிலை முடிவினை பெற்றது அந்த அணிக்கு அதிர்ச்சியான முடிவாகவே பார்க்கப்படுகிறது. குரேஷியா அணி இந்தப் போட்டியில் வெற்றி பெறுமென்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
ஆபிரிக்கா கண்ட நாடான மொரோக்கோ அணி போட்டி ஆரம்பித்தது முதல் கடும் சவாலை வழங்கி வந்தது. குரேஷியா அணி கடுமையாக வெற்றிக்காக போராடிய போதும் அது சாத்தியமற்று போனது. குழு F ஆனது பெல்ஜியம் அணியினை பலமாக கொண்டுள்ளது. கனடாவும் இதே குழுவில் காணப்படுகிறது.