ஸ்பெய்ன் சாதனையுடனான வெற்றி.

கட்டாரில் நடைபெற்று வரும் உலக கிண்ண காற்பந்தாட்ட தொடரின் குழு E இற்கான போட்டியில் ஸ்பெய்ன் அணி கொஸ்டரிக்கா அணியினை இலகுவாக வெற்றி பெற்றுள்ளது. 7-0 என்ற கோல் கணக்கில் இந்த வெற்றி ஸ்பெய்ன் அணிக்கு கிடைத்தது. ஸ்பெய்ன் அணி உலக கிண்ண தொடரில் பெற்றுக்கொண்ட கூடுதலான கோல் எண்ணிக்கை இதுவே.

போட்டி ஆரம்பித்தது முதல் ஸ்பெய்ன் அணி சிறப்பாக விளையாடியது. சம இடைவெளிகள் கோல்களையும் பெற்றுக்கொண்டனர். ஒரு கோல் பனால்டி மூலமாக கிடைத்தது.

இந்த உலக கிண்ணத்தின் அதிக கோல் வித்தியாசதில் பெறப்பட்ட வெற்றியாக இந்த வெற்றி அமைந்தது.

11 ஆவது நிமிடத்தில் டனி ஒல்மோவின் கோலின் மூலமாக தமது கணக்கை ஆரம்பித்தது ஸ்பெய்ன். அடுத்த இரு 10 நிமிட இடைவேளைகளில் மார்கோ அசன்சியோ மற்றும் பெரன் ரொஷஸ் ஆகியோர் கோல்களை பெற்றனர். பெரன் ரொஷஸ் பனால்டி மூலம் கோலை பெற்றுக்கொணடார். இருப்பினும் இரண்டாவது பாதியில் 54 ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலை பெற்றுக்கொண்டார். அதன் சிறிது நேரத்தின் பின்னர் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டது. 74 ஆவது நிமிடத்தில் கவி ஒரு கோலை பெற்றுக்கொடுத்தார்.

போட்டி நிறைவடைதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் கார்லோஸ் சோலார் மற்றும் அல்வாரோ மொராட்டா ஆகியோர் ஒவ்வொரு கோல்களை பெற்றுக்கொடுத்தனர்.

போட்டி முழுக்க முழுக்க ஓரு பக்க போட்டியாகவே சென்று நிறைவடைந்தது. ஸ்பெய்ன் அணியின் இந்த வெற்றி அவர்கள் இந்த உலக கிண்ண தொடரில் பலமாக இருப்பதனை வெளிக்காட்டியுள்ளது.

ஸ்பெயின் அணியின் இள வயது வீரர்கள் தமது திறமையினை சிறப்பாக வெளிக்காட்டினார்கள்.

 அணிபோட்டிவெற்றிதோல்விசமநிலைபுள்ளிகோ வித்அடி.கோ    பெ.கோ
1ஸ்பெய்ன்0101000003070700
2ஜப்பான்0101000003010201
3ஜேர்மனி0100010000-010102
4கொஸ்டரிக்கா0100010000-070007
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version