வேல்ஸ் அணிக்கு அதிர்ச்சி வழங்கிய ஈரான்

கட்டாரில் நடைபெற்று வரும் உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றுப் போட்டியின் தமது இரண்டாவது போட்டியில் ஈரான், வேல்ஸ் அணிகள் மோதின. இரு அணிகளுமே ஆரம்பம் முதல் கடுமையாக போராடின. போட்டி நிறைவடையும் தறுவாயில் ஈரான் அணி அடுத்தடுத்து அடித்த இரண்டு கோல்களின் மூலமாக 2 – 0 என வெற்றி பெற்றது. இது உலக கிண்ண தொடரில் ஈரான் அணியின் மூன்றாவது வெற்றியாகும்.

வேல்ஸ் அணி முதற் போட்டியினையும் சமநிலையில் நிறைவு செய்தது. ஈரான் அணி முதற் போட்டியில் தோல்வியடைந்த நிலையில் இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தமக்கான வாய்ப்பினை தக்க வைத்துள்ளது. பலமான அணியாக கருதப்படும் வேல்ஸ் அணிக்கான வாய்ப்புகள் இன்னமும் காணப்படுகின்ற போதும் அடுத்த போட்டியில் வெற்றி கட்டாயம் தேவை என்ற நிலையும் மற்றைய அணிகளது முடிவில் தங்கியிருக்க வேண்டும் என்ற நிலையும் உருவாகியுள்ளது.

87 ஆவது நிமிடத்தில் வேல்ஸ் அணியின் கோல் காப்பாளர் வெய்ன் ஹெனசி சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இந்த உலக கிண்ணத்தின் முதல் சிவப்பு அட்டை இதுவாகும். இதுவும் வேல்ஸ் அணியின் தோல்விக்கு முக்கியமான காரணமாக அமைந்தது.

98 ஆம் ஆண்டு அமெரிக்க அணியினையும், 2018 ஆம் ஆண்டு மொரோக்கோ அணியினையும் ஈரான் அணி வெற்றி பெற்றுள்ளது.

ஈரான் அணு சார்பாக 98 ஆவது நிமிடத்தில் ரூஸ்பே செஸ்மி ஒரு கோலையும், 101 ஆவது நிமிடத்தில் ரமின் ரெஸெய்ன் இன்னுமொரு கோலையும் பெற்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version