கட்டாரில் நடைபெற்று வரும் உலக கிண்ண தொடரில் போட்டிகளை நடாத்தும் கட்டார் அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துள்ளது. இன்று நடைபெற்ற செனகல் மற்றும் கட்டார் அணிகளுக்கிடையிலான போட்டியில் செனகல் அணி 2-0 என வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் கடந்த போட்டியில் தோல்வியினை சந்தித்த செனகல் அணி அடுத்த சுற்று வாய்ப்பை தக்க வைத்துள்ளது.
விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியினை சந்தித்த கட்டார் அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துள்ளது.
41 ஆவது நிமிடத்தில் பௌல்யே டியா முதல் கோலை அடித்தார். இரண்டாவது கோல் இரண்டாவது பாதி ஆரம்பிக்கப்பட்டு மூன்று நிமிடத்தில் பமாரா டிதியோவினால் அடிக்கப்பட்டது.
செனகல் அணி முன்னிலை பெற்ற போதும் கட்டார் அணி விடாது போராடியது. 78 ஆவது நிமிடத்தில் மொஹமட் முன்தாரி ஒரு கோலை கட்டார் அணிக்காக பெற்றுக் கொடுத்தார். இந்த நிலையில் போட்டி மிகவும் சூடு பிடித்தது.
செனகல் அணிக்காக செய்க் டெய்ங் 84 ஆவது நிமிடத்தில் மூன்றாவது கோலை அடித்தார். போட்டி அவ்வாறே 3-1 என நிறைவுக்கு வந்தது.