இங்கிலாந்து, அமெரிக்கா அணிகளுக்கிடையில் கட்டாரில் நடைபெற்ற உலக கிண்ண காற்பந்தாத்தாட்ட போட்டி தொடரின் போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது. இந்த சமநிலை முடிவின் காரணமாக குழு B இன் நான்கு அணிகளுக்குமான வாய்ப்பு திறந்த நிலையில் காணப்படுகிறது.
இங்கிலாந்து அணி ஈரான் அணியுடன் வெற்றி பெற்றுள்ளது. அமெரிக்கா அணி வேல்ஸ் அணியுடன் சமநிலை முடிவினை பெற்றுள்ளது.
போட்டி ஆரம்பித்தது முதல் இரு அணிகளும் சிறப்பாக விளையாடின. கோல்களை பெற கடினமாக முயற்சித்தன. ஆனால் கோல்களை பெற முடியவில்லை.
பலமான இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக அமெரிக்காவின் சமநிலை முடிவு சிறப்பானதாக கருதப்படுகிறது. முதல் பாதியில் அமெரிக்கா இங்கிலாந்திலும் பார்க்க சிறப்பாக விளையாடியது.
இங்கிலாந்து அணி அமெரிக்கா அணியினை உலக கிணத்தில் இதுவரை வென்றதில்லை. 50 ஆம் ஆண்டு அமெரிக்க வென்றுள்ளது. அதன் பின்னர் 2010 ஆம் ஆண்டு சமநிலை முடிவு.
இந்தக் குழுவின் அடுத்த கட்ட அணிகளுக்கான இறுதிப் போட்டிகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமையயவுள்ளன.
| அணி | போட்டி | வெற்றி | தோல்வி | சமநிலை | புள்ளி | கோ வித் | அடி.கோ | பெ.கோ | |
| 1 | இங்கிலாந்து | 02 | 01 | 00 | 01 | 04 | 04 | 06 | 02 |
| 2 | ஈரான் | 02 | 01 | 00 | 01 | 03 | -02 | 04 | 06 |
| 3 | அமெரிக்கா | 02 | 00 | 00 | 02 | 02 | 00 | 01 | 01 |
| 4 | வேல்ஸ் | 02 | 00 | 01 | 01 | 01 | -02 | 01 | 03 |