உலக கிண்ண தொடரின் அவுஸ்திரேலியா மற்றும் டுனீசியா அணிகளுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா அணி 1-0 என வெற்றி பெற்றுள்ளது. கட்டாரில் நடைபெறும் உலக கிண்ண தொடரில் இந்த வெற்றியின் மூலம் அடுத்த சுற்றுக்கு தெரிவாக கூடிய வாய்ப்பினை அவுஸ்திரேலியா அணி தக்க வைத்துள்ளது.
முதற் போட்டியில் பிரான்ஸ் அணியுடன் கடுமையாக போராடி அவுஸ்திரேலியா அணி தோல்வியடைந்தது. அவுஸ்திரேலியா அணி உலக கிண்ண தொடரில் பெற்றுள்ள மூன்றவது வெற்றி இதுவாகும்.
இதுவரை 18 போட்டிகளில் விளையாடியுள்ள அவுஸ்திரேலியா அணி 3 வெற்றிகளையும், 4 சமநிலை முடிவுகளையும் பெற்றுள்ளது. 2006 ஆம் ஆண்டு ஜப்பான் அணிக்கெதிராகவும், சேர்பியா அணிக்கெதிராக 2010 ஆம் ஆண்டும் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் டுனீசியா அணி தோல்வியடைந்துள்ள போதும், டென்மார்க் அணிக்கெதிராக சமநிலை முடினை பெற்றமையினால் அவர்களுக்கான வாய்ப்பும் இன்னமும் காத்திருக்கின்றது.
இரு அணிகளுக்குமிடையிலான இன்றைய போட்டி மிகவும் கடுமையாக அமைந்தது. 23 ஆவது நிமிடத்தில் அவுஸ்திரேலியா அணி சார்பாக மிச் டியூக் பெற்ற கோலின் மூலமாக அவுஸ்திரேலியா முன்னனிலை பெற்று இறுதி வரை அதனை தக்க வைத்துக்கொண்டாது.
கோல்களை பெற அதிகமாக டுனீசியா அணி முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை