இலங்கை, ஆப்கானிஸ்தான் இரண்டாவது ODI

SriLanka Vs Afghanistan - 2023 உலகிண்ணத்துக்கு தொடர் வெற்றி இரு அணிகளுக்கும் முக்கியம். V Media.

இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.

இரு அணிகளும் மாற்றங்களின்றி விளையாடுகின்றன.

——-

இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டி இன்று கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

இலங்கைக்கான முதலாவது கிரிக்கெட் தொடரில் விளையாடும் ஆப்கானிஸ்தான் அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்தப் போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையவுள்ளது. அத்தோடு 2023 உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கு நேரடியாக தகுதி பெற இரு அணிகளுக்கும் இந்த தொடரின் வெற்றிகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமையவுள்ளன. ஆகவே வெற்றி என்பது இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமையவுள்ளன.

கண்டியில் நேற்று இரவு பொழுது மழை பெய்திருந்தது. மாலை 6 மணியளவில் சிறியளவிலான மழை காணப்பட்டது. இரவு 9 மணியளவில் நீண்ட நேரம் ஓரளவு கடுமையான மழை பெய்தது. இன்று காலை கடும் வெப்பம் காணப்படுகின்றது. மதிய வேளையில் வெப்பம் குறைவடைந்து காற்றுடன் கூடிய காலநிலை காணப்படுகிறது. மழைக்கான வாய்ப்புகள் குறைந்தளவில் காணப்படுகிறது.

இரு அணிகளும் மாற்றங்களின்றி விளையாடும் வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன. அவுஸ்திரேலியா அணியுடனான தொடரில் விளையாடிய துணித் வெல்லாலகே இந்த போட்டியில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை என கேள்விகள் எழும்பியிருந்த நிலையில் இன்று அவர் சேர்க்கப்படலாம் என்ற எதிர்பார்ப்புகளும் காணப்படுகின்றன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version