ஜேர்மனி அணி இன்று வெற்றி பெற்றாலே இலகுவாக இரண்டாம் சுற்றுக்கு தெரிவாக முடியுமென்ற நிலையில் நடைபெற்ற போட்டி மிகவும் விறு விறுப்பாக நடைபெற்றது. முதற் போட்டியில் ஸ்பெய்ன் அணி அபார வெற்றியினை பெற்ற நிலையில் ஜேர்மனி அணி இன்று ஸ்பெய்ன் அணியுடன் தடுமாற வேண்டிய நிலை ஏற்படுமென எதிர்பார்க்கப்பட்து. அவ்வாறே போட்டியின் ஆரம்பத்தில் நடைபெற்றது.
62 ஆவது நிமிடத்தில் ஸ்பெய்ன் அணியின் வீரர் அல்வேரோ மொரட்டா அடித்த கோலின் மூலமாக ஸ்பெய்ன் முன்னிலை பெற்றது. மோரோட்டாவின் இரண்டாவது உலக கிண்ண கோலாகும். ஜேர்மனி அணிக்கு இந்தப் போட்டியிலும் தோல்வியென்ற நிலையேற்பட்டது. போராடிய ஜேர்மனி அணி சார்பாக நிக்லஸ் புல்ரக் 83 ஆவது நிமிடத்தில் கோலடித்த போட்டியினை சமன் செய்தார். ஜேர்மனி அணிக்கு தோல்வியிலும் பார்க்க சமநிலை சிறந்த முடிவே என்ற நிலையில் போட்டி நிறைவு வந்தது.
குழு E இல் நான்கு அணிகளுக்கும் சம வாய்ப்புகள் இன்னமும் காணப்படுகின்றன. அதிக கோல் வித்தியாசத்தை கொண்டுள்ள ஸ்பெய்ன் அணிக்கான வெற்றி வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது. அடுத்த போட்டிகளில் வெற்றி பெறுமணிகள் இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகும் என்ற நிலை காணப்படுகிறது. ஆனாலும் ஸ்பெய்ன் அணி சமநிலை முடிவினை பெற்றாலே போதும் என்ற நிலை காணப்டுகிறது. ஸ்பெய்ன், ஜப்பான் போட்டி சமநிலையில் முடிந்தால் ஜேர்மனி அணி வெற்றி பெற்றாலும் வெளியேற்றப்படும்.
இவ்வாறான நிலையில் 02 ஆம் திகதி நடைபெறவுள்ள போட்டிகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமையவுள்ளன.
அணி | போட்டி | வெற்றி | தோல்வி | சமநிலை | புள்ளி | கோ வித் | அடி.கோ | பெ.கோ | |
1 | ஸ்பெய்ன் | 02 | 01 | 00 | 01 | 04 | 07 | 08 | 01 |
2 | ஜப்பான் | 02 | 01 | 01 | 00 | 03 | 01 | 02 | 01 |
3 | கொஸ்டரிக்கா | 02 | 01 | 01 | 00 | 00 | -06 | 01 | 07 |
4 | ஜேர்மனி | 02 | 00 | 01 | 01 | 00 | -01 | 01 | 02 |