கட்டாரில் நடைபெற்று வரும் உலக கிண்ண தொடரின் இரண்டாம் சுற்றுக்கு பிரேசில் அணி தெரிவாகியுள்ளது. இதுவரை நடைபெற்ற போட்டிகளின் படி பிரேசில் அணி இரண்டாவது அணியாக இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகியுள்ளது.
சுவிற்சலாந்து மற்றும் பிரேசில் அணிகளுக்கிடையிலான போட்டி ஆரம்பம் முதலே கடுமையான போட்டியாக அமைந்தது. சுவிற்சலாந்து அணி பிரேசில் அணிக்கு கோல்கள் அடிக்கும் வாய்ப்புகளை இலகுவாக வழங்கவில்லை. அத்தோடு சுவிற்சலாந்து அணியும் கோல்களுக்கு கடுமையாக முயற்சித்தது.
பிரேசில் அணி சார்பாக 64 ஆவது நிமிடத்தில் கோல் அடிக்கப்பட்ட போதும் தொழில்நுட்ப சோதனையில் ஒப் சைட் என உறுதி செய்யப்பட கோல் இல்லாமல் போனது. இறுதியாக கஷெமிறோ 83 ஆவது நிமிடத்தில் அடித்த கோல் மூலமாக பிரேசில் வெற்றியினை பெற்றுக் கொண்டது.
முதற் போட்டியில் பிரேசில் அணி சேர்பியா அணியினை வெற்றி பெற்றது. விளையாடிய இரண்டு போட்டிகளிலும் விளையாடியுள்ள நிலையில் இரண்டாம் சுற்றுக்கு தெரிவானது.
சுவிற்சலாந்து அணி கமரூன் அணியினை வெற்றி பெற்றுள்ள நிலையில் அடுத்த போட்டியில் சேர்பியா அணியோடு சமநிலை முடிவினை பெற்றாலும் அடுத்த சுற்றுக்கு தெரிவாகவும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் வெற்றியே 100 வீத வாய்ப்பபை தரும். தோல்வியடைந்தால் அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் வாய்ப்ப்பை இழக்கும்.
அணி | போட்டி | வெற்றி | தோல்வி | சமநிலை | புள்ளி | கோ வித் | அடி.கோ | பெ.கோ | |
1 | பிரேசில் | 02 | 02 | 00 | 00 | 06 | 03 | 03 | 00 |
2 | சுவிற்சலாந்து | 02 | 01 | 01 | 00 | 03 | 01 | 01 | 00 |
3 | கமரூன் | 02 | 00 | 01 | 01 | 01 | -01 | 03 | 04 |
4 | சேர்பியா | 02 | 00 | 01 | 01 | 01 | -02 | 05 | 03 |