போர்த்துக்கல் மற்றும் உருகுவே அணிகளுக்கிடையில் கட்டாரில் நடைபெற்ற உலக கிண்ண காற்பந்தாட்ட போட்டியில் போர்த்துக்கல் அணி 2 -0 என வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகியுள்ளது.
குழு H இற்கான போட்டிகளில் போர்த்துக்கல் அணி ஏற்கனவே கானா அணியினை வெற்றி பெற்ற போர்த்துக்கல் அணி இன்று இரண்டாவது வெற்றியினையும் பெற்ற நிலையில் போர்த்துக்கல் அணி தெரிவானது.
உருகுவே அணி தென் கொரியா அணியுடன் சமநிலை முடிவினை பெற்ற நிலையில், அடுத்து கானா அணியுடன் வெற்றி பெற்றாலே இரண்டாம் சுற்றுக்கு தெரிவாக முடியும். அதேவேளை தென் கொரியா அணி போர்த்துக்கல் அணியை வெற்றி பெறக்கூடாது.
போர்த்துக்கல், உருகுவே அணிகளுக்கிடையிலான போட்டி விறு விறுப்பாக அமைந்த போதும், முதற் பாதி மெதுவாகவே நகர்ந்து சென்றது, இரண்டாம் பாதி வேகமான விளையாட்டுடன் நகர்ந்தது.
போர்த்துக்கல் அணியின் புருனு பெர்னாண்டஸ் அடித்த சிறப்பான கோலின் மூலமாக போர்த்துக்கல் அணி முன்னிலை பெற்றது. 92 ஆவது நிமிடத்தில் கையால் பந்தை தொட்ட குற்றத்துக்கு தொழில்நுட்ப சோதனை மூலம் பனால்டி கிடைத்தது. ரொனால்டோ 82 நிமிடத்தில் வெளியேறிய காரணத்தினால் புருனோ பெர்னாடோஸ் பனால்டியினை அடித்து இரண்டாவது கோலை தனதாக்கினார்.
போர்த்துக்கல் அணியின் கோல் காப்பாளர் டியாகோ கொஸ்டா, உருகுவே அணியின் சிறந்த கோல் முயற்சிகளை தடுத்தமையினாலும் போர்த்துக்கல் அணி வெற்றி பெற்றது.
உருகுவே அணியின் நட்சத்திர வீரரான லூயிஸ் சுவரெஸ் 73 ஆவது நிமிடத்திலேயே களமிறக்கப்பட்டார்.
அணி | போட்டி | வெற்றி | தோல்வி | சமநிலை | புள்ளி | கோ வித் | அடி.கோ | பெ.கோ | |
1 | போர்த்துக்கல் | 02 | 02 | 00 | 00 | 06 | 03 | 05 | 02 |
2 | கானா | 02 | 00 | 01 | 01 | 01 | 00 | 05 | 05 |
3 | தென் கொரியா | 02 | 00 | 01 | 01 | 01 | -01 | 02 | 03 |
4 | உருகுவே | 02 | 00 | 01 | 01 | 01 | -02 | 00 | 02 |