கட்டாரில் நடைபெற்று வரும் உலக கிண்ண தொடரின் குழு C இற்கான போட்டிகளின் அடிப்படையில் ஆர்ஜன்டீனா, அணிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
ஆர்ஜன்டீனா அணி முதற் போட்டியில் சவுதி அரேபியா அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தமையினால் அவர்கள் மீது அழுத்தம் ஒன்று காணப்பட்டது. ஆனால் அவற்றை எல்லாம் இல்லாமல் செய்யும் வகையில் போலந்து அணியுடன் இன்று மிக அபாரமாக விளையாடி வெற்றி பெற்றுள்ளனர். பந்தினை கிட்ட தட்ட முழுக்க, முழுக்க தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். போட்டி ஆரம்பித்து சிறப்பாக விளையாடி வரும் நிலையில் கோல் ஒன்று இல்லையே என்ற நிலையில், 39 ஆவது நிமிடத்தில் பனால்டி கிடைத்த போதும் மெஸ்ஸி அதனை தவறவிட்டார்.
முதற் பாதி கோல்களின்றி நிறைவடைந்தது. இரண்டாவது பாதி ஆரம்பித்த ஒரு நிமிடத்தில் அலெக்சிஸ் மக் கலிஸ்டர் அடித்த கோலின் மூலம் ஆர்ஜன்டீனா அணி முன்னிலை பெற்றது. 67 ஆவது நிமிடத்தில் ஜூலியன் அல்வெரெஸ் இரண்டாவது கோலை அடித்தார். இன்று ஆர்ஜன்டீனா அணிக்கு பல கோல்களுக்கான வாய்ப்புகள் இருந்தும் போலந்து கோல் காப்பாளரினால் அவை தடுக்கப்பட்டன. ஆர்ஜன்டீனா அணி குழு C இல் முதலிடத்தை பெற்றுள்ள நிலையில், குழு D இன் இரண்டாமிட அணியான அவுஸ்திரேலியா அணியுடன் இரண்டாம் சுற்றில் மோதவுள்ளது.
சவுதி, அரேபியா , மெக்சிகோ அணிகளுக்கிடையிலான போட்டியில் மெக்சிகோ அணி 2-1 என வெற்றி பெற்றது. ஆனாலும் அவர்களுக்கு அடுத்த சுற்றுக்கு தெரிவாக முடியாமல் போனது. மெக்சிகோ மற்றும் போலந்து அணிகள் சம புள்ளிகளில் காணப்பட்ட போதும் கோல் வித்தியாசத்தில் போலந்து அணி முன்னிலை பெற்றது.
மெக்சிகோ, சவுதி அரேபியா அணிகளுக்கிடையிலான போட்டி கடுமையாக இருக்குமென எதிர்பார்க்கப்பட்ட போதும் மெக்சிகோ பக்கமாக போட்டி மாறியது. சவுதி அணி வெற்றி பெற்றிருந்தால் அவர்களுக்கு அடுத்த சுற்று வாய்ப்பு. ஆனால் அது இல்லாமல் போனது.
இரு அணிகளுக்குமான போட்டியின் முதற் பாதி கோல்களின்றி நிறைவடைந்தது. இரண்டாம் பாதி ஆரம்பித்து 2 நிமிடங்களில் ஹென்றி மார்ட்டின் ஒரு கோலையும், லூயிஸ் சாவெஸ் ஒரு கோலையும் அடித்தார்கள். இவற்றின் மூலமாக இந்தப் போட்டியில் மெக்சிகோ அணி வெற்றி பெற்றது. போட்டி நிறைவடைய இரு நிமிடங்கள் இருந்த வேளையில் சவுதி அரேபியா அணி ஒரு கோலை அடித்தது. சவுதி சார்பாக சலீம் அல்தவாசாரி ஒரு கோலினை அடித்தார்.
குழு C இல் இரண்டாமிடத்தை பெற்றுள்ள போலந்து அணி குழு D இல் முதலிடத்தை பெற்றுள்ள பிரான்ஸ் அணியினை சந்திக்கவுள்ளது.
அணி | போட்டி | வெற்றி | தோல்வி | சமநிலை | புள்ளி | கோ வித் | அடி.கோ | பெ.கோ | |
1 | ஆர்ஜன்டீனா | 03 | 02 | 00 | 00 | 06 | 03 | 05 | 02 |
2 | போலந்து | 03 | 01 | 00 | 01 | 04 | 00 | 02 | 02 |
3 | மெக்சிகோ | 03 | 01 | 01 | 01 | 04 | -01 | 03 | 04 |
4 | சவுதி அரேபியா | 03 | 01 | 02 | 00 | 03 | -02 | 03 | 05 |