உலக தமிழர் பூப்பந்து பேரவையினால் வருடா வருடம் நடாத்தப்படும் உலக கிண்ண தொடர் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 08, 09 ஆம் திகதிகளில் சுவிற்சலாந்தில் நடைபெறவுள்ளது. இதனை உலக தமிழர் இறகுப்பந்து பேரவை அறிவித்துள்ளது.
எட்டாவது தடவையாக இந்த தொடர் நடைபெறவுள்ளது. ஆண்கள், பெண்கள் அடங்கலாக பல வித வயது பிரிவுகள் மற்றும் தர பிரிவுகளில் இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன.
மிகவும் பிரமாண்டமாக நடைபெறும் இந்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பெறுமதியான பணப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.
17 நாடுகளில் உலக தமிழர் பூப்பந்து பேரவையின் இணைப்பாளர்கள்கள் மூலமாக இந்த உலக கிண்ண தொடரில் பங்குபற்றுவதற்காக விண்ணப்பிக்க முடியும்.
வயது பிரிவுகள், தொடர்பு விபரங்கள் கீழே உள்ள புகைப்படத்தில் காணப்படுகிறது. தகுதியானவர்கள் விண்ணப்பித்து சர்வதேச தர போட்டிகளில் பங்குபற்றுங்கள்.
