அவுஸ்திரேலியாவில் மனைவியை கொலை செய்த இலங்கையர்.

அவுஸ்திரேலியா, மெல்பேர்ன், சந்தேரஸ்ட் நகரத்தில் 44 வயதான மூன்று பிள்ளைகளின் தாயான தன்னுடைய மனைவியினை 45 வயதான நபர் ஒருவர் கொலை செய்துள்ளார்.

சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நெலோமி பெரேரா எனும் பெண், அவரின் கணவரான 45 வயதான டினுஷ் குரேரா எனும் நபரினால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் உறுதி செய்துள்ளது.

இறந்த பெண்ணை, அவரது பிரிந்து வாழும் கணவர் நள்ளிரவு வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து தாக்கியுள்ளார். இந்த தாக்குதலின் போது அவர்களது மகனுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் சிகிச்சைகளின் பின்னர் ஆபத்து எதுவுமற்ற நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடாத்தப்பட்ட வேளையில் இறந்த பெண்ணின் மகள் அயல் வீட்டாரின் உதவியினை கோரியுள்ளார். அவர்கள் வருவதற்குள் அந்த பெண் இறந்துவிட்டதாக அயல் வீட்டார்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர். இருப்பினும் மகள் உதவி கோரிய வேளையிலேயே தாய் இறந்துவிட்டதாக கூறுவது கண்காணிப்பு வீடியோ பதிவுகளில் பதிவாகியுள்ளது.

இறந்த பெண் இனிமையான, மென்மையான குணம் கொண்டவர் எனவும், திறமையான தாய் எனவும் அயலவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version