அடுத்த கட்ட கடும் சோதனையை நோக்கி இங்கிலாந்து.

இங்கிலாந்து மற்றும் செனகல் அணிகளுக்கிடையிலான உலககிண்ண தொடரின் முன்னோடி காலிறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி இலகுவான வெற்றியினை பெற்று காலிறுதிப் போட்டிக்குத் தெரிவானது .

கட்டாரில் நடைபெறும் உலக கிண்ண தொடரின் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 3-0 என வெற்றி பெற்று பத்தாவது தடவையாக காலிறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. கடந்த முறை இங்கிலாந்து அணி அரை இறுதிப் போட்டி வரை முன்னேறியது.

இந்தப் போட்டியின் ஆரம்பம் மிகவும் விறு விறுப்பாக அமைந்தது. செனகல் சிறப்பாக விளையாடிய அதேவேளை, கோல்களுக்கும் முயற்சி செய்தார்கள். ஆனால் இங்கிலாந்து அணியின் ஜோர்டான் ஹெண்டர்சன் 38 ஆம் நிமிடத்தில் கோலடித்து முன்னிலை பெற்றுக் கொடுத்தார். முதற் பாதி நிறைவடையும் தறுவாயில் ஹரி கேன் அடித்த கோல் மூலமாக இங்கிலாந்து அணி மேலும் பலம் பெற்று முன்னிலை பெற்றது. இரண்டாம் பாதி ஆரம்பித்தது முதல் செனகல் அணியின் விளையாட்டு சோடை போனது. 57 ஆவது நிமிடத்தில் புக்காயோ சாகா மூன்றாவது கோலை அடித்தார்.

வெற்றி பெற்றுள்ள இங்கிலாந்து அணி, பிரான்ஸ் அணியுடன் எதிர்வரும் 11 ஆம் திகதி காலிறுதிப் போட்டியில் மோதவுள்ளது. உலக கிண்ண காலிறுதிப் போட்டிகளில் கடுமையான போட்டியாக இந்தப் போட்டியே எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரையில் நடைபெற்ற நான்கு போட்டிகளும் ஒரு பக்க போட்டிகளாவே சென்று நிறைவடைந்துள்ளன. கடந்த முறை உலக கிண்ண முன்னோடி காலிறுதிப் போட்டிகள் மிகவும் விறு விறுப்பாக அமைந்திருந்தன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version