இந்தியாவுக்கான இலங்கை கிரிக்கட் அணியின் தொடருக்கான திகதிகள் மற்றும் மைதான விபரங்களை இந்தியா கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது. ஜனவரி மாதம் 03 ஆம் திகதி இந்த தொடர் ஆரம்பிக்கவுள்ளது.
மூன்று 20-20 போட்டிகளிலும், மூன்று ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளிலும் இலங்கை அணி இந்தியா அணியுடன் விளையாடவுள்ளது.
போட்டி விபரம்
முதலாவது 20-20 – ஜனவரி 03 – மும்பய்
இரண்டாவது 20-20 – ஜனவரி 05 – பூனே
மூன்றாவது 20-20 – ஜனவரி 07 – ராஜ்கோட்
முதலாவது ODI – ஜனவரி 10 – குவாஹத்தி
இரண்டாவது ODI – ஜனவரி 12 – கொல்கொத்தா
மூன்றாவது ODI – ஜனவரி 15 – திருவானந்தபுரம்.
நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுடான தொடருக்கான திகதிகள் மற்றும் மைதான விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ன.
ஜனவரி 17 முதல் பெப்ரவரி 01 வரை நியூசிலாந்து அணி மூன்று 20-20 போட்டிகள் மற்றும் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடவுள்ளன.
அவுஸ்திரேலியா அணி பெப்ரவரி 09 ஆம் திகதியிலிருந்து மார்ச் 13 ஆம் திகதி வரை 04 டெஸ்ட் போட்டிகளிலும், மார்ச் 17,19,22 ஆம் திகதிகளில் மூன்று ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடவுள்ளன.