தம்புள்ள ஓரா, கொழும்பு ஸ்டார்ஸ் அணிகளுக்கிடையிலான லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் மூன்றாம் நாளுக்கான போட்டியில் கொழும்பு ஸ்டார்ஸ் அணி 09 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
166 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய தம்புள்ள அணி 20 ஓவர்களில் 07 விக்கெட்களை இழந்து 156 ஓட்டங்களை பெற்றது.
தம்புள்ள அணி சிறந்த ஆரம்பத்தை பெற்ற போதும், மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்கள் அதிரடியாக துடுப்பாட முடியாமல் போனமையினால் தோல்வியடைய வேண்டிய நிலை ஏற்பட்டது. கொழும்பு அணியின் பந்து வீச்சில் சுரங்க லக்மால், டொமினிக் ரேக்ஸ், கரீம் ஜனட் ஆகியோரது பந்துவீச்சும், நவீன் உல் ஹக்கின் இறுக்கமான பந்துவீச்சும் தம்புள்ள அணியினை கட்டுப்படுத்தியது.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| ஷெவான் டானியல் | பிடி – கரீம் ஜனட் | டொமினிக் ட்ரேக்ஸ் | 28 | 27 | 4 | 0 |
| ஜோர்டான் கொக்ஸ் | பிடி – டொமினிக் ட்ரேக்ஸ் | சுரங்க லக்மால் | 29 | 15 | 6 | 0 |
| பானுக்கா ராஜபக்ஷ | பிடி – நவோட் பரணவித்தாரன | கரீம் ஜனட் | 17 | 14 | 2 | 0 |
| ரொம் அப்பெல் | பிடி – ஜெப்ரி வன்டர்சாய் | சுரங்க லக்மால் | 33 | 22 | 5 | 0 |
| தஸூன் சாணக்க | 31 | 20 | 2 | 2 | ||
| சிகான்டர் ரஷா | பிடி – நிரோஷன் டிக்வெல்ல | கரீம் ஜனட் | 00 | 03 | 0 | 0 |
| லஹிரு மதுஷங்க | பிடி – நிரோஷன் டிக்வெல்ல | நவீன் உல் ஹக் | 01 | 02 | 0 | 0 |
| சதுரங்க டி சில்வா | Bowled | டொமினிக் ட்ரேக்ஸ் | 04 | 05 | 0 | 0 |
| தரிந்து ரட்நாயக்க | 08 | 10 | 1 | 0 | ||
| நூர் அஹமட் | ||||||
| லஹிரு குமாரா | ||||||
| உதிரிகள் | 02 | |||||
| ஓவர் 20 | விக்கெட் 07 | மொத்தம் | 156 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| அஞ்சலோ மத்தியூஸ் | 01 | 00 | 10 | 00 |
| சுரங்க லக்மால் | 04 | 00 | 29 | 02 |
| டொமினிக் ட்ரேக்ஸ் | 04 | 00 | 35 | 02 |
| நவீன் உல் ஹக் | 04 | 00 | 22 | 01 |
| சரித் அசலங்க | 01 | 00 | 03 | 00 |
| ஜெப்ரி வன்டர்சாய் | 02 | 00 | 19 | 00 |
| ரவி போபரா | 01 | 00 | 07 | 00 |
| கரீம் ஜனட் | 03 | 00 | 30 | 02 |
ஹம்பாந்தோட்டை, மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாடிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்களில் 09 விக்கெட்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றது.
கொழும்பு அணி ஆரம்பத்தில் விக்கெட்களை இழந்து தடுமாறிய வேளையில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய நிரோஷன் டிக்வெல்ல நல்ல ஆரம்பத்தை வழங்க கொழும்பு அணி மீண்டது. மத்திய வரிசையில் ரவி போபரா, டினேஷ் சந்திமாலும் நிதானம் கலந்த அதிரடி துடுப்பாட்டத்தின் மூலம் வலுவான ஓட்ட எண்ணிக்கைக்கு அணியினை நகர்த்தி சென்றனர்.
லஹிரு குமார ஆரம்ப விக்கெட்களை தகர்த்து கொழும்பு அணியினை தடுமாற வைத்தார்.
இரு அணிகளும் தாம் விளையாடிய முதற் போட்டிகளில் தோல்விகளை சந்தித்துள்ள நிலையில் கொழும்பு அணி முதல் வெற்றியினை பெற்றுள்ளது.
சகல அணிகளும் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் கண்டி பல்கொன்ஸ் முதலிடத்திலும், ஜப்னா கிங்ஸ் இரண்டாம் இடத்திலும், கொழும்பு ஸ்டார்ஸ் அணி மூன்றாமிடத்திலும், தம்புள்ள ஓரா, காலி கிளாடியேட்டர்ஸ் ஆகிய அணிகள் நான்காம் ஐந்தாம் இடங்களிலும் காணப்படுகின்றன.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| நிரோஷன் டிக்வெல்ல | பிடி – லஹிரு மதுஷங்க | தரிந்து ரட்நாயக்க | 62 | 41 | 8 | 2 |
| அஞ்சலோ மத்தியூஸ் | பிடி – சிகான்டர் ரஷா | லஹிரு குமாரா | 04 | 03 | 1 | 0 |
| நவோட் பரணவித்தாரன | L.B.W | லஹிரு குமாரா | 00 | 01 | 0 | 0 |
| சரித் அசலங்க | பிடி – சத்துரங்க டி சில்வா | லஹிரு குமாரா | 06 | 06 | 0 | 1 |
| ரவி போபரா | Run Out | 26 | 25 | 2 | 1 | |
| டினேஷ் சந்திமால் | 29 | 23 | 2 | 1 | ||
| கரீம் ஜனட் | Boweld | சிகான்டர் ரஷா | 02 | 04 | 0 | 0 |
| டொமினிக் ட்ரேக்ஸ் | பிடி – ஜோர்டான் கொக்ஸ் | லஹிரு குமாரா | 18 | 22 | 2 | 0 |
| சுரங்க லக்மால் | பிடி – சத்துரங்க டி சில்வா | லஹிரு மதுஷங்க | 06 | 03 | 0 | 1 |
| ஜெப்ரி வன்டர்சாய் | Run Out | 05 | 02 | 1 | 0 | |
| உதிரிகள் | 07 | |||||
| ஓவர் 20 | விக்கெட் 09 | மொத்தம் | 165 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| லஹிரு குமாரா | 04 | 00 | 36 | 04 |
| சிகான்டர் ரஷா | 04 | 00 | 31 | 01 |
| தரிந்து ரட்நாயக்க | 03 | 00 | 20 | 01 |
| லஹிரு மதுஷங்க | 02 | 00 | 17 | 01 |
| தஸூன் சாணக்க | 02 | 00 | 20 | 00 |
| நூர் அஹமட் | 03 | 00 | 23 | 00 |
| சதுரங்க டி சில்வா | 02 | 00 | 17 | 00 |