கொழும்பு அணிக்கு வெற்றி

தம்புள்ள ஓரா, கொழும்பு ஸ்டார்ஸ் அணிகளுக்கிடையிலான லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் மூன்றாம் நாளுக்கான போட்டியில் கொழும்பு ஸ்டார்ஸ் அணி 09 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

166 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய தம்புள்ள அணி 20 ஓவர்களில் 07 விக்கெட்களை இழந்து 156 ஓட்டங்களை பெற்றது.

தம்புள்ள அணி சிறந்த ஆரம்பத்தை பெற்ற போதும், மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்கள் அதிரடியாக துடுப்பாட முடியாமல் போனமையினால் தோல்வியடைய வேண்டிய நிலை ஏற்பட்டது. கொழும்பு அணியின் பந்து வீச்சில் சுரங்க லக்மால், டொமினிக் ரேக்ஸ், கரீம் ஜனட் ஆகியோரது பந்துவீச்சும், நவீன் உல் ஹக்கின் இறுக்கமான பந்துவீச்சும் தம்புள்ள அணியினை கட்டுப்படுத்தியது.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
ஷெவான் டானியல்பிடி – கரீம் ஜனட்டொமினிக் ட்ரேக்ஸ்282740
ஜோர்டான் கொக்ஸ்பிடி – டொமினிக் ட்ரேக்ஸ்சுரங்க லக்மால்291560
பானுக்கா ராஜபக்ஷபிடி – நவோட் பரணவித்தாரனகரீம் ஜனட்171420
ரொம் அப்பெல்பிடி – ஜெப்ரி வன்டர்சாய்சுரங்க லக்மால்332250
தஸூன் சாணக்க  312022
சிகான்டர் ரஷாபிடி – நிரோஷன் டிக்வெல்லகரீம் ஜனட்000300
லஹிரு மதுஷங்கபிடி – நிரோஷன் டிக்வெல்லநவீன் உல் ஹக்010200
சதுரங்க டி சில்வாBowledடொமினிக் ட்ரேக்ஸ்040500
தரிந்து ரட்நாயக்க  081010
  நூர் அஹமட்      
லஹிரு குமாரா      
உதிரிகள்  02   
ஓவர்  20விக்கெட்  07மொத்தம்156   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்ட விக்
அஞ்சலோ மத்தியூஸ்01001000
சுரங்க லக்மால்04002902
டொமினிக் ட்ரேக்ஸ்04003502
நவீன் உல் ஹக்04002201
சரித் அசலங்க01000300
ஜெப்ரி வன்டர்சாய்02001900
ரவி போபரா01000700
கரீம் ஜனட்03003002

ஹம்பாந்தோட்டை, மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாடிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்களில் 09 விக்கெட்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றது.

கொழும்பு அணி ஆரம்பத்தில் விக்கெட்களை இழந்து தடுமாறிய வேளையில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய நிரோஷன் டிக்வெல்ல நல்ல ஆரம்பத்தை வழங்க கொழும்பு அணி மீண்டது. மத்திய வரிசையில் ரவி போபரா, டினேஷ் சந்திமாலும் நிதானம் கலந்த அதிரடி துடுப்பாட்டத்தின் மூலம் வலுவான ஓட்ட எண்ணிக்கைக்கு அணியினை நகர்த்தி சென்றனர்.

லஹிரு குமார ஆரம்ப விக்கெட்களை தகர்த்து கொழும்பு அணியினை தடுமாற வைத்தார்.

இரு அணிகளும் தாம் விளையாடிய முதற் போட்டிகளில் தோல்விகளை சந்தித்துள்ள நிலையில் கொழும்பு அணி முதல் வெற்றியினை பெற்றுள்ளது.

சகல அணிகளும் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் கண்டி பல்கொன்ஸ் முதலிடத்திலும், ஜப்னா கிங்ஸ் இரண்டாம் இடத்திலும், கொழும்பு ஸ்டார்ஸ் அணி மூன்றாமிடத்திலும், தம்புள்ள ஓரா, காலி கிளாடியேட்டர்ஸ் ஆகிய அணிகள் நான்காம் ஐந்தாம் இடங்களிலும் காணப்படுகின்றன.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
நிரோஷன் டிக்வெல்லபிடி – லஹிரு மதுஷங்கதரிந்து ரட்நாயக்க624182
அஞ்சலோ மத்தியூஸ்பிடி – சிகான்டர் ரஷாலஹிரு குமாரா040310
நவோட் பரணவித்தாரனL.B.Wலஹிரு குமாரா000100
சரித் அசலங்கபிடி – சத்துரங்க டி சில்வாலஹிரு குமாரா060601
ரவி போபராRun Out 262521
டினேஷ் சந்திமால்  292321
கரீம் ஜனட்Boweldசிகான்டர் ரஷா020400
டொமினிக் ட்ரேக்ஸ்பிடி – ஜோர்டான் கொக்ஸ்லஹிரு குமாரா182220
சுரங்க லக்மால்பிடி – சத்துரங்க டி சில்வாலஹிரு மதுஷங்க060301
ஜெப்ரி வன்டர்சாய்Run Out 050210
       
உதிரிகள்  07   
ஓவர்  20விக்கெட்  09மொத்தம்165   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
லஹிரு குமாரா04003604
சிகான்டர் ரஷா04003101
தரிந்து ரட்நாயக்க03002001
லஹிரு மதுஷங்க02001701
தஸூன் சாணக்க02002000
நூர் அஹமட்03002300
சதுரங்க டி சில்வா02001700

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version