முகக்கவசம் அணியவும். சுவாச சிக்கல் உள்ளவர்கள் வெளியே செல்ல வேண்டாம்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள வளி மாசு பாதிப்புகளை ஏற்படுத்தும் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவ பெயற்சி மூலமாக இந்தியாவிலிருந்து வளி மாசு இலங்கைக்கு கடத்தப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் வெளியிடங்களுக்கு செல்பவர்கள் முககவசம் அணிந்து செல்வது பாதுகாப்பை தருமெனவும், சுவாச நோயுள்ளவர்கள் அதனுடன் தொடர்பான சிக்கல் நிலையுடையவர்கள் வெளியிடங்களுக்கு செல்வதனை தவிர்த்துக் கொள்ளுமாறு சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர் வைத்தியர் அணில் ஜயசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

ஏற்பட்டுள்ள இந்த பிரச்சசினை பாரதூரமானது அல்ல எனவும், இதனை தற்போது பெரிய அளவில் எடுத்துக்கொள்ளுமளவுக்கான சிக்கல் இல்லை எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்தியாவிலும், இலங்கையின் அண்மைய நாடுகளிலும் ஏற்படும் வளி மாசு வட கிழக்கு பருவ பெயற்சி காரணமாக இலங்கைக்கு கடத்தப்படுவதாகவும், அதன் காரணமாக பல இடங்களில் வளி மாசுபட்டுள்ளதாகவும் மேலும் கூறியியுள்ளார்.

இவ்வாறன சூழ்நிலையில் கர்பிணிப்பெண்கள், வயதானவர்கள், சுவாச நோயுள்ளவர்கள், இதய, சுவாச நோயுள்ளவர்கள், ஒவ்வாமை உள்ளவர்கள் இந்த பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க உரிய முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த வளி மாசின் தாக்கம் யாழ்ப்பாணம், வவுனியா, கொழும்பு, கண்டி, புத்தளம் ஆகிய இடங்களில் காணப்படுவதாக அவர் கூறியுள்ளார். வளி மாசின் அளவீடுகள் தொடர்பில் தொடர்ந்தும் அவதானித்து வருவதாக மேலும் அவர் கூறியுள்ளார்.

“மாலைதீவுகள் பிரகடனம்” தெற்காசிய நாடுகளுக்குள் வளி மாசினை பரவாமல் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்டுள்ள போதும், அதன் செயற்பாடுகள் மந்த கதியில் காணப்படுவதனால் இவ்வாறன பாதிப்புகள் ஏற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply