கால்நடைகளின் மரணத்திற்கு இதுவே காரணம்!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அண்மைக்காலமாக அதிகளவான பசுக்கள், எருமை மாடுகள் மற்றும் ஆடுகள் இறந்ததற்கு கடும் குளிரே காரணம் என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம், பேராதனையினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர், அண்மைக்காலமாக உயிரிழந்த விலங்குகள் தொடர்பான அறிக்கையைத் தொடர்ந்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக நிலவி வரும் மோசமான காலநிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுமார் 1,660 பசுக்கள், எருமைகள் மற்றும் ஆடுகள் உயிரிழந்துள்ளன. மேலும் பல நோய்வாய்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, இந்த விலங்குகளின் திடீர் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு விவசாயம், வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

அதற்கமைய நடத்திய விரிவான விசாரணைகளில் இந்த விலங்குகள் இறந்ததற்கு காரணம் தொற்றுநோய் அல்ல, மாறாக கடுமையான குளிரால் ஏற்பட்ட அதிர்ச்சியே காரணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version