லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து கதாநாயகனாக நடித்த திரைப்படம் ‘தி லெஜண்ட்’. இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அண்மையில் ஸ்டூடியோ திறப்பு விழாவில் கலந்துகொண்ட லெஜெண்ட் சரவணன் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் அதற்கான ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் “மக்களும், மகேசனும் நினைத்தால் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்” என தெரிவித்துள்ளார்.