அரை இறுதியில் ஆர்ஜன்டீனா தோற்றதில்லை. அபார வெற்றி.

காற்பந்து உலக கிண்ண தொடரின் இறுதிப் போட்டிக்கு ஆர்ஜன்டீனா அணி ஆறாவது தடவையாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. முதல் உலக கிண்ண தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவான ஆர்ஜன்டீனா அணி 22 ஆவது உலக கிண்ண தொடரின் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.

ஆர்ஜன்டீனா அணி இரண்டு தடவைகள் சம்பியனாக மகுடம் சூடியது.

குரேஷியா அணியுடனான போட்டியில் 3-0 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது ஆர்ஜன்டீனா அணி.

இந்தப் போட்டியில் ஆர்ஜன்டீனா அணியின் இள வயது வீரரான ஜுவான் அல்வரெஸின் அபாரமான, வேகமான விளையாட்டு ஆர்ஜன்டீனா அணிக்கு கைகொடுத்தது. முதல் கோலை அவர் அடிக்க முற்பட்ட வேளையில் அவரை கோல் காப்பாளர் தடுத்து வீழ்த்தியதனால் பனால்டி கிடைத்தது. அதனை மெஸ்ஸி கோலாக மாற்றினார். 34 ஆனது நிமிடத்தில் இந்த கோல் பெறப்பட்டது. ஐந்து நிமிடத்தில் தவற விட்டது போன்றே ஜுவான் அல்வரெஸ் கோல் ஒன்றை அடித்தார்.

69 ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி தனது பாணியில் பந்தை கோல் போஸ்ட் நோக்கி கொண்டு சென்று ஜுவான் அல்வரெஸுக்கு வழங்க இலகுவான இரண்டாவது கோலை அவர் அடித்தார்.

இன்று மெஸ்ஸி அடித்த கோலின் மூலமாக ஆர்ஜன்டீனா அணி சார்பாக கூடுதலான கோல்களாக 11 கோல்களை அடித்துள்ளார்.

பிரான்ஸ், மொரோக்கோ அணிகளுக்கியிடையிலான அரை இறுதிப் போட்டியில் வெற்றி பெறுமணி ஆர்ஜன்டீனா அணியுடன் இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது.

ஆர்ஜன்டீனா அணி இறுதியாக 2014 ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்குத்தெரிவாகி இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்டது.

2018 ஆம் ஆண்டு குரேஷியா அணியிடம் 3-0 என முதல் சுற்றில் தோல்வியடைந்த ஆர்ஜன்டீனா அணி அதற்கு பழி தீர்த்துக்கொண்டது.

Social Share

Leave a Reply