அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

இன்று (14) அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொச, 5 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோ பருப்பின் விலை 4 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது, அதன் புதிய விலை 385 ரூபாவாகும்.

கோதுமை மா கிலோ ஒன்றுக்கு 15 ரூபா குறைக்கப்பட்டுள்ளதுடன், தற்போது அந்த புதிய விலை 250 ரூபாவாகும்.

இதேவேளை, ஒரு கிலோ வெள்ளை பூண்டு 35 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 460 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ வெங்காயம் 9 ரூபாவினால் குறைக்கப்பட்டுது, அதன் புதிய விலை 190 ரூபாவாகும் அதேவேளை இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் டின் மீன்களின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது, இதன் புதிய விலை 490 ரூபாவாகும்.

இதேவேளை, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் எதிர்வரும் வாரத்தில் மேலும் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த சில மாதங்களோடு ஒப்பிடுகையில் பொருட்களின் விலை தற்போது குறைந்துள்ளது, இந்த பண்டிகை காலத்தில் மேலும் பொருட்களின் விலைகளை குறைப்பதே எனது நோக்கம் எனவும், மக்களின் சுமையை குறைக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது, எனவே அடுத்த வாரங்களின் பொருட்களின் விலைகள் மேலும் குறைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply