ஹுனுபிட்டிய கங்காராம விகாரையை புண்ணிய பூமியாககிறது.

ஹுனுபிட்டிய கங்காராம விகாரையை புண்ணிய பூமியாக அபிவிருத்தி செய்வதற்கான அதிகாரப்பூர்வ பத்திரம் ஜனாதிபதியினால் கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையை புண்ணிய பூமியாக அபிவிருத்தி செய்வதற்கான அதிகாரப்பூர்வ பத்திரத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையின் விகாராதிபதி கலபொட ஞானிஸ்ஸர நாயக்க தேரரிடம் கையளித்தார். ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையின் கலபொட ஞானிஸ்ஸர நாயக்க தேரரின் ஜனன தினத்தை முன்னிட்டு இன்று (14.12) விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, தேரரிடம் நலம் விசாரித்தார்.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பௌத்த மக்களால் பெரிதும் மதிக்கப்படும் ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையை பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு வழங்குவது தொடர்பான அதிகாரப்பூர்வ பத்திரத்தில் ஜனாதிபதி கையொப்பமிட்டார்.

கங்காராம விகாராதிபதி கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி தேரர் தலைமையில் மகா சங்கத்தினர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் பந்துல குணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, உபாலி குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் நிமல் வெல்கம மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version