முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில்
ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகமாக செயற்பட்ட சுதேவ ஹெட்டியாராச்சி கண்டியில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
போக்குவரத்து விதிமீறல் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று பிற்பகல் கண்டியில் குடிபோதையில் வாகனம் செலுத்தி வெளிநாட்டு பிரதிநிதிகளின் வழியை மறித்து வாகனம் நிறுத்தியமை மற்றும் பொலிஸ் உத்தரவை மீறி வாகனம் செலுத்திய குற்றத்திற்காக இவர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளின் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.