கொழும்பு துறைமுக நகருக்கு புதிய வகை விசாக்களை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி, கொழும்பு துறைமுக நகரத்தில் வரி அடிப்படையில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு குடியிருப்பு விசா வகை, முதலீட்டாளர்களுக்கு முதலீட்டாளர் விசா வகை, ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு விசா வகை மற்றும் CPC குடியிருப்பு சொத்து வரி வாங்குபவர் விசா வகை என புதிய விசா வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக நகரத்தில் நிறுவப்படவுள்ள சர்வதேச வர்த்தகம், கப்பல் போக்குவரத்து மற்றும் செயற்பாடுகள், நிதி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா போன்ற பல்வேறு சேவைகளுக்காக முதலீடு செய்யவிருக்கும் முதலீட்டாளர்கள் மற்றும் இவை தொடர்புடைய தரப்பினருக்கு விசா மற்றும் இதர தொடர்புடைய செயற்பாடுகளை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் முன்னெடுக்கவுள்ளது.
கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் உரிய விசா வகைகளை அறிமுகப்படுத்துவதற்கு பொது பாதுகாப்பு அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு தற்போது அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.