அநுராதபுரம் – வவுனியா புகையிரத பாதை திருத்த வேலைகளுக்காக எதிர்வரும் ஜனவரி 5ம் திகதி முதல் 5 மாத காலத்திற்கு மூடப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் ஐந்து மாதங்களில் கொழும்பு கோட்டையிலிருந்து அனுராதபுரம் வரையிலும், அனுராதபுரத்திலிருந்து கொழும்பு கோட்டை வரையிலும் புகையிரதங்கள் மாத்திரம் இயக்கப்படும் எனவும் அனுராதபுரத்திலிருந்து வவுனியா வரை போக்குவரத்துக்காக பஸ்கள் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் காங்கேசன்துறையிலிருந்து முருகன்டி வரை இயக்கப்படும் யாழ்ராணி புகையிரதம், இந்த திருத்த பணிகள் மேற்கொள்ளப்படும் 5 மாதங்கள் முழுவதும் வவுனியா வரை இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.