இந்த ஆண்டிலும் வாகன உற்பத்திகள் அதிகரிக்கப்படாது!

கொரோனா தொற்று உலக பரவல் காரணமாக வீழ்ச்சியடைந்த வாகன உற்பத்தித் துறை 2023ஆம் ஆண்டிலும் மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கார் உற்பத்தி நிறுவனங்களின் தரவுகளை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளன.

மேலும், உற்பத்தி குறைந்ததால், கேள்வி அதிகரித்ததுடன், பல நிறுவனங்கள் தங்கள் வாகனங்களை நல்ல விலைக்கு விற்கும் வாய்ப்பை பெற்றுக்கொண்டது. எனவே அதையே இந்த ஆண்டிலும் தக்கவைத்துக்கொள்வதே தங்களது நோக்கம் என்று வாகன உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

வாகன லீசிங் வசதிகளுக்கு செலுத்த வேண்டிய வட்டித் தொகையும் அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே உற்பத்தி அளவை குறைக்க சில நிறுவனங்கள் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும், அதில் ஒன்றாக உற்பத்தித் தொழிற்சாலைகளில் பணி நேரத்தை கணிசமாகக் குறைக்க தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டிலும் வாகன உற்பத்திகள் அதிகரிக்கப்படாது!

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version