டினேஷ் சாப்டர் வழக்கு விசாரணை

ஜனசக்தி நிறுவனத்தின் பணிப்பாளர் டினேஷ் சாப்டரது வழக்கு விசாரணைகள் நேற்று(04.01) நடைபெற்றது. நீதிபதி ரஜீந்திர ஜெயசூரிய முன்னிலையில் நீதிமன்றம் 02 இல் திறந்த விசாரணையாக இந்த வழக்கு ஆரம்பித்தது.

ஜனசக்தி நிறுவதின் நிறைவேற்று அதிகாரி பெரேரா மற்றும் திருமதி டினேஷ் சாப்டரர் ஆகியோர் சாட்சியமளித்தாக தகவல்கள் மூலம் தெரிவிய வந்துள்ளது. பொலிஸார் தங்களது விசாரணைகளின் அடிப்படையிலான தடயங்கள் மற்றும் சாட்சியங்களை முன்வைத்தாக மேலும் அறியப்படுகிறது.

இந்த சாட்சியங்கள் நீதிபதியின் தனிப்பட்ட உத்தியோகபூர்வ அறையில் இடம்பெற்றுள்ளது. அதன் போது ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

டினேஷ் சாப்டர் அண்மையில் கொலும்பு பொரளை, கனத்தை பொது மயானத்தில் காரினுள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில், மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.

இந்த இறப்பு கொலையா, தற்கொலையா என்ற சந்தேகமும் எழுந்துள்ள நிலையில் பொலிஸ் விசாரணைகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறன நிலையிலேயே நேற்று நீதிமன்ற விசாரணைகள் ஆரம்பித்துள்ளன.

டினேஷ் சாப்டர் வழக்கு விசாரணை
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version