ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவில்லை

பாராளுமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்கிக்குள் பிரிவினைகள் அல்லது உடைவுகள் எதுவும் இல்லை என ஐக்கிய மக்கள் சக்த்தியின் முக்கியஸ்தர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி சஜித் பிரேமதாசவை விமர்சித்த விடயம், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான சமிந்த விஜேசிறி, ஹர்ஷா விதானகே ஆகியோர், வரவு செலவு திட்ட பிரேரணை வாக்களிப்பில் அரசாங்க தரப்புக்கு மாறுவதாக வெளிவந்த செய்திகள் ஆகியவற்றால் ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளன. அத்தோடு ஐக்கிய தேசிய கட்சியோடு சிலர் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் ஊடகங்கள் மூலம் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தொடர்பிலான பிரச்சினைகள் பேசி சுமூகமாக தீர்க்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொது செயலாளர் ரஞ்சித் மத்துகம பண்டார தெரிவித்துள்ளார். தான் கட்சி உறுப்பினர்களுடனும் பேசியதாகவும் இந்த விடயம் தொடர்பில் உறுப்பினர்கள் யாரும் முரண்பாடான கருத்தோடு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க பக்கமாக மாறும் எண்ணம் யாருக்கும் இல்லையென தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துக்கொரல ரணில் விக்ரமசிங்க பலருக்கு முன்நாள் தலைவர். சிலர் அவரோடு இன்னமும் நெருக்கமான உறவுகளை பேணுகிறார்கள். அதனை வைத்துக் கொண்டு கட்சி மாறப்போகிறார்கள் என சொல்ல முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவில்லை
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version