கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போஷாக்கு உணவு கொடுப்பனவு அதிகரிப்பு!

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 45,000 ரூபாவுக்கான போஷாக்கு உணவு கொடுப்பனவை வழங்கும் திட்டத்தை இந்த ஆண்டு முதல் ஆரம்பிக்கவுள்ளதாக பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரையில் 20,000 ரூபா பெறுமதிக்கு வழங்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்கு கொடுப்பனவு திட்டம் இந்த ஆண்டு முதல் 45,000 20,000 ரூபா பெறுமதி கொண்ட போசாக்கு கொடுப்பனவு திட்டமாக மாற்றப்படவுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.

கர்ப்ப காலத்தில் 6 மாதங்கள் மற்றும் தாய்ப்பால் ஊட்டும் காலத்தில் 4 மாதங்கள் என முழுமையாக 10 மாத காலத்திற்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மாதாந்தம் 4500 ரூபா வீதம் 10 மாதங்களுக்கு இந்த போஷாக்கு கொடுப்பனவு வழங்கப்படும் என பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு அறிவித்துள்ளது.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போஷாக்கு உணவு கொடுப்பனவு அதிகரிப்பு!

Social Share

Leave a Reply