கொழும்பில் உள்ள அனைத்து பொருளாதார நிலையங்களுக்கும் 53 ரூபாவிற்கு முட்டை வழங்கப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், 8 இலட்சம் முட்டைகள் இன்று (07.01) கொழும்புக்கு கொண்டுவரப்படவுள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அதன் தலைவர் திரு.சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
குருநாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு இலவசமாக முட்டைகளை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
